இன்றைய ராசிபலன் – 22 ஏப்ரல் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்று எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். மக்கள் செல்வாக்கு பெருகும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலர் புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவார்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் வீணான செலவுகள் ஏற்படும். நண்பர்களால் பிரச்சனைகள் உண்டாகும். கொடுக்கல் – வாங்கலில் இழுபறிநிலை இருக்கும். மனதில் குழப்பமான நிலை இருக்கும். ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணிய அனைத்தும் ஈடேறும். பெண்கள் வழியில் பணவரவு ஏற்படும். வெளியூர், வெளிநாடு பயண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு சுப விரயங்கள் ஏற்படும். உடல் மற்றும் மனம் உற்சாகமாக இருக்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்கள் அமோகமாக நடக்கும். எந்த ஒரு முயற்சியிலும் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவார்கள். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் செல்வ சேர்க்கை உண்டாகும். மனைவி வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். சிலர் கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவார்கள். மகான்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பணம் வரவுகளில் தாமதங்கள் ஏற்படும். தொலைதூர பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சிலர் அடிக்கடி கோபப்படுவார்கள். குழந்தைகள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சராசரியான வருமானம் இருக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்கு இன்றைய தினம் சந்திராஷ்டம் என்பதால் சிலருக்கு வீண் பொருள் விரயங்கள் ஏற்படும். உடற் சோர்வு அதிகரிக்கும். குடும்பத்தினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பணியிடத்தில் சக ஊழியர்களால் வீண் விரயங்கள் ஏற்படும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நேரடி மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். பிரிந்து சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் சிறப்பான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். அரசாங்க ரீதியான காரியங்களில் அணுகமான நிலை ஏற்படும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வாகனங்கள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்கள் சற்று தள்ளிப்போகும். பணியிடங்களில் பிறருடன் வீண் பிரச்சனைகளில் ஈடுபடக் கூடாது. மனதில் இனம் புரியாத கவலைகள் ஏற்படும். பெண்களால் சிலருக்கு தேவையற்ற செலவுகள் உண்டாகும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் பொன்னான நாளாக இருக்கும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்ததை விட லாபம் பெருகும். அரசியலில் இருப்பவருக்கு நன்மைகள் ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் சுபச் செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் இழுபறி நிலை இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும்.

- Advertisement -