இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2022

today rasi palan 22/07/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்கள் அனுகூல பலன் தரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கைவிடாமல் இருப்பது நல்லது. நினைத்தது நடக்கும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனமாக இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த பொறுப்புகளை சரியாக செய்து முடிக்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இடைவிடாத உழைப்பு மன உளைச்சலை கொடுக்கும். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற சுமைகளை மனதில் சுமக்க வேண்டாம். வருவது வரட்டும் என்று விட்டு விடுவது நல்லது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் வரலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப பொறுப்புகளில் கூடுதல் அக்கறை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படலாம். திட்டமிட்டு எந்த ஒரு விஷயத்தையும் செய்வது அனுகூல பலன் கொடுக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை உடனுக்குடன் கவனிப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதை துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். கணவன் மனைவியிடையே இருக்கும் விரிசல் நீங்கும். சுப காரிய தடைகள் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் தொந்தரவு குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம் எனவே ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்க போகிறது. எதையும் தைரியமாக எதிர்கொள்வது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு நல்ல நாளாக இருக்கும். புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கவனம் தேவை. தேவையற்ற எண்ணங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் சரியானதாக இருக்கும். தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை மனதில் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே புதிய புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவு நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை விரிசல் விழுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். சமூக அக்கறை அதிகரிக்கும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளை தாண்டிய வெற்றியை வெறும் நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களே சூழ்ச்சி செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பாராத அதிர்ஷ்டம் வரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் கடமையில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. குடும்ப பொறுப்புகளை உணர்ந்து செயல்படுங்கள். சுப காரிய முயற்சிகளில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறைவழிபாட்டின் மீது அதிக ஆர்வம் காணப்படும். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய கை ஓங்கி இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்ப பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையில் இருந்த விரிசல் மறைந்து ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். விட்டு சென்ற உறவுகள் வந்து இணைய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் இருந்து பின்வாங்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடமையை கூடுதல் அக்கறையுடன் இருப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -