இன்றைய ராசிபலன் (22 நவம்பர் 2021)

rasi-palan-22/11/21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத திடீர் நன்மைகளைப் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுயதொழில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மந்தமாக உணர்வீர்கள். குடும்பத்தில் குதுகலம் காணப்படும்.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதார்த்தமாக செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கணக்கிலான பலன்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தலைமை பொறுப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் புரிதல் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் விலகும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். யோகத்தை உள்ளவர்களுக்கே மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் மேலும் வலுவாக உள்ளதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிக கோபத்தை தவிர்த்து கொள்வது நல்லது. தேவையற்ற வெளியிட பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகம் இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் மாற்றங்கள் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் இன்றைய நாளை மற்றவர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் நாளாக அமையும். ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தீட்டிய திட்டங்கள் தீட்டியப்படி நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். மூன்றாம் நபரை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிறைவு இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரம்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாளை மனநிலையில் இருந்து வந்த குழப்பங்கள் தீர கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்களை விட்டு சென்றவர்கள் மீண்டும் வந்தினைய வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களைக் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் தரும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வம்பு வழக்குகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் வயிறு தொடர்பான பிரச்னைகள் வந்து நீங்கும்.

- Advertisement -