இன்றைய ராசி பலன் – 22-12-2019

rasi palan - 22-12-2019

மேஷம்:
Mesham Rasi
இன்றைய தினம் உங்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்தவேண்டிய நாளாக அமையும். எதிர்பாராத ஆரோக்கியப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன்-மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

ரிஷபம்:
Rishabam Rasi
இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உங்களிடமிருக்கும் திறமையால் பலரின் பாராட்டுக்களை பெறுவீர்கள். உங்களின் சில நல்ல குணங்களால் இன்றைய தினம் நீங்கள் பெருமையடைய இருக்கிறீர்கள். அனைவரிடமும் நட்பு பாராட்டுவீர்கள். குதூகலத்துடன் காணப்படுவீர்கள். உறவுகளின் அருமை புரிந்து நடந்து கொள்வீர்கள்.

மிதுனம்:
midhunam
இன்றைய தினம் நீங்கள் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் மேலதிகாரிகளின் தொந்தரவு இருக்கும். தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபாடு வளர்த்துக் கொள்ளுங்கள்.

கடகம்:
Kadagam Rasi
இன்றைய தினம் உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். சோர்வுடன் காணப்படுவீர்கள். எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. தம்பதியர்களிடையே பரஸ்பர ஒற்றுமை நிலவும். உறவினர்களிடம் உங்களின் மரியாதை உயரும் வாய்ப்புகள் இருக்கிறது. உழைப்பிற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.

சிம்மம்:
simmam
இன்று உங்களின் நாள் அதிர்ஷ்டகரமான ஒரு நாளாக இருக்கும். எதிர்பாராத வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். தொலை தூர பயணத்தால் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரலாம். முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்களின் பலவீனத்தை சிலர் பயன்படுத்த பார்ப்பார்கள். கவனமுடன் இருங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

- Advertisement -

கன்னி:
Kanni Rasi
இன்றைய நாள் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக அமையும். உங்களின் தேவையற்ற முன்கோபத்தால் சிலரின் மனதில் உங்களின் மதிப்பு குறைய வாய்ப்புகள் இருக்கிறது. பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய தருணம் இது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு நல்ல ஓய்வு தேவை.

துலாம்:
Thulam Rasi
இன்றைய தினம் உங்களுடைய தனவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்தபடி பணம் கைக்கு வரும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் நல்ல தருணம் இது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும. ஈசனை வழிபட்டு வாழ்க்கையில் ஏற்றம் பெறுவீர்கள்.

விருச்சிகம்:
virichigam
இன்றைய நாள் அயராது பாடுபட்டு மிகவும் சோர்வடைந்து காணப்படுவீர்கள். உங்களின் உடல் மிகவும் பலவீனமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையான ஓய்வு இல்லை எனில் அது பெரும் பிரச்சினையில் கொண்டுபோய் முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தம்பதியருக்கிடையே ஒற்றுமை பலப்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இனிமையாக பேசுவதே மனநிம்மதிக்கு வழிவகுக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

தனுசு:
Dhanusu Rasi
இன்று உங்களின் நகைச்சுவை உணர்வால் பலரின் மனதில் நீங்கா இடத்தை பிடிப்பீர்கள். உங்களின் குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நல்ல நாளாக இருக்கும். எந்த முடிவுகளையும் இன்றைய தினத்தில் நீங்கள் தாராளமாக எடுக்கலாம். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு இன்றைய தினத்தை சிறப்பான நாளாக மாற்றி கொள்ளுங்கள்.

மகரம்:
Magaram rasi
இன்றைய தினம் உங்களுக்கு வீண் அலைச்சலை ஏற்படுத்தும் நாளாக அமையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமூக அக்கறையுடன் நடந்து கொள்ளும் ஒரு நாளாக இருக்கும். உங்களின் நேர்மையான குணமே உங்களை பல பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும்.

கும்பம்:
Kumbam Rasi
இன்றைய தினம் உங்களின் திறமைகளுக்கு மதிப்புகள் கிடைக்கப்போகும் ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்களின் தனிப்பட்ட திறமையால் உங்களின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் ஒரு வாய்ப்புகள் உருவாகியிருக்கிறது. அதனை பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். கணவன்-மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க விட்டுக் கொடுப்பது நல்லது.

மீனம்:
meenam
இன்றைய தினம் நீங்கள் வெகு நாளாக எதிர்பார்த்த ஒரு நற்செய்தி இல்லம் தேடி வரும். உங்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தம்பதியருக்கிடையே சங்கடங்கள் உருவாகும் வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்