இன்றைய ராசி பலன் – 22-2-2020

rasi palan - 22-2-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனநிறைவுடன் காணப்படும் நாளாக இருக்கும். எதையோ சாதித்த திருப்தி உங்களுக்குள் குடிகொண்டு உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்களின் மூலம் நன்மைகள் உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். மாணவர்கள் கல்வி நிலை ஏற்றத்துடன் காணப்படும். தொழில்முறை கல்விகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொள்வீர்கள். பெண்களுக்கு இறை வழிபாடுகளின் மூலம் மன நிம்மதி கிட்டும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக சோர்வு ஏற்படும். எனினும் உங்களது கடமைகளை செவ்வனே செய்து முடிப்பீர்கள். பலரது பாராட்டையும் பெறுவீர்கள். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். வாடிக்கையாளர்கள் கூறும் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறைந்துவிடும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமூகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். உங்களுக்கு கொடுக்கப்படும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது மூலம் முன்னேற்றம் காணலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையற்ற மன சங்கடங்கள் உருவாகலாம். முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். பெண்களுக்கு மன நிம்மதி இருக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சவால்களை சந்திக்க கூடிய நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார விருத்தி காரணமாக சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காக முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது. சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டு. பெண்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும் நினைத்த காரியங்கள் கைகூடும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற சிக்கல்களை எதிர்கொள்வதற்கான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை விஷயமாக பிரச்சனைகள் உருவாகலாம். அதனை தீர்க்கும் முயற்சிகளில் ஈடு படுவீர்கள். புதிதாக வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார நுணுக்கங்களை கற்றுத் தேர்வதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. பெண்கள் ஒருசிலருக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை நிலவும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களின் கல்வியில் கவனம் தேவை. பெண்கள் இதை வழிபாடுகளின் மூலம் ஆதாயம் காண்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் சில பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில் முயற்சிகள் லாபகரமாக அமையும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. திருமணப் பேச்சு வார்த்தைகள் வெற்றி தரும். வீடு கட்டும் பணிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கால தாமதம் ஏற்படலாம். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபம் தரும் நாளாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி உண்டு. வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் முகத்துடன் காணப்படுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படுகின்றன.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். செயலை செய்யும் முன் இதை செய்வது சரியா என்று ஒரு தடவை சிந்தித்து செயலாற்றுவது நல்ல பலனை தரும். மற்றவர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது தான். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும் வியாபாரம் செய்பவர்களுக்கு சில சந்திக்க நேரிடும் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிந்தனைகளை சிதறவிடாமல் கல்வியில் தேவை.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக சிறுது சோர்வு ஏற்படும். எனினும் தங்களது பணியில் கவனமாக இருப்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொள்வீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டு. திருமண முயற்சிகள் வெற்றி தரும். பெண்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டு.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றமான நாளாக இருக்கும் எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றி தரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகக்கூடும். அடுத்த நிலைக்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. பெண்களுக்கு மனதிற்குப் பிடித்த விஷயங்கள் நடைபெறும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். மாணவர்களின் கல்வியில் அக்கறை தேவை. சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் தாமதம் ஏற்பட்டாலும் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் பலிக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். தடைபட்ட திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றி காணும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்களின் கல்வியில் அக்கறை தேவை.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.