இன்றைய ராசிபலன் – 23 பிப்ரவரி 2024

Rasi-palan-new23
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன கஷ்டங்கள் வரக்கூடிய நாளாக அமையப் போகின்றது. சந்தோஷமா சிரிக்க கூட விட மாட்டாங்க. தொல்லை தர 4 பேர் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்க போறாங்க. வேலை செய்யும் இடத்திலும் தொழிலிலும் சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. எதுவாக இருந்தாலும் தைரியமாக சமாளிக்க கத்துக்கோங்க. சிக்கலை கண்டு துவண்டு போகாதீங்க. பிரச்சனை வந்தால் பார்த்துக் கொள்ளலாம். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுங்கள். அமைதியாக இருந்தால் இன்று நீங்கள் ஏமாளிகள் என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷத்திற்கு எந்த குறையும் இருக்காது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். தொழிலில் நஷ்டமாகி விடுமோ என்று நினைத்த விஷயங்கள் எல்லாம், லாபமாக மாறும். முதலீடு செய்து வைத்திருந்த பணத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். தேவையற்ற நேரத்தில் தேவையற்ற உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. எல்லா வேலையையும் முடித்து விட்டோம் என்று ரிலாக்ஸ் ஆக ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு எல்லாம் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனென்றால் அன்றாட வேலையை விட, இன்று கொஞ்சம் கூடுதல் வேலை இருக்கப் போகின்றது. அலுவலகத்தில் வேலை, வியாபாரம் செய்பவர்களுக்கு கடையில் வேலை, என்று தலைக்கு மேலே பாரம் காத்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் பார்த்து பக்குவமா நடந்துக்கோங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஏமாற்றம் நிறைந்த நாளாக இருக்கும். ரொம்பவும் எதிர்பார்த்த ஒரு விஷயத்தில், சின்ன ஏமாற்றம் வந்தாலும், மனசு தாங்காது. அப்படிப்பட்ட நிலைமை தான் இன்று உங்களுக்கும் இருக்கப் போகின்றது. ஆனால் மனதை பலவீனமடைய விடாதீங்க. எதுவும் கடந்து போகும் என்ற வாக்கியத்தை சொல்லி உங்களை நீங்களே தேத்திக் கொள்ளுங்கள். அடுத்த வேலையை பார்க்கத் தொடங்குங்கள். உங்களுக்கான நல்லது உங்களைத் தேடி வரும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களின் செயல் எரிச்சல் மூட்டும் வகையில் அமையும். உங்களுக்கு முன்கோபம் கொஞ்சம் வந்து கொண்டே இருக்கப் போகின்றது. உங்களை சீண்டி பார்க்க எதிராளிகள் சூழ்ச்சி செய்வார்கள். ஆகவே நீங்க அதற்கெல்லாம் அஞ்ச கூடாது. நீங்க பாட்டுக்கு உங்களுடைய வேலையை செய்யுங்கள். அலுவலகப் பணியில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். தொழிலில் அடுத்தவர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க கூடாது. குறிப்பாக முதலீடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு என்று நீண்ட நாள் கஷ்டங்கள் மறைய வாய்ப்பு உள்ளது. ரொம்ப நாள் பேசாமல் இருந்த ஒரு சொந்த பந்தத்திடமோ அல்லது நண்பர்களிடமோ பேசக்கூடிய வாய்ப்பு இருக்கும். பிரிந்த கணவன் மனைவி கூட இன்று ஒன்று சேரலாம். ஆகவே இப்படிப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் இன்று மன்னிப்பு கேட்க உகந்த நாளாக இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக செல்லும். ஆக மொத்தத்தில் இன்று மன நிம்மதியோடு இரவு நல்லா தூங்குவீங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் அறிவு திறமையால் மொத்த கம்பெனிக்கே லாபம் கிடைத்து பாராட்டுகளை பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. நிறைய புகழ்ச்சி கிடைக்கும்போது தலைகனமும் வரும் அல்லவா. அது உங்களுக்கும் இன்று வரும். அதை வைத்து அடுத்தவர்களை தரம் குறைவாக பேசாதீங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுடைய உதவியை அதிகமாக எதிர்பார்ப்பீர்கள். உதவி எதிர்பார்த்து கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் மனமுடைந்து போக வாய்ப்புகள் உள்ளது. இதனால் மனசு கொஞ்சம் கஷ்டப்படும். வேலையில் பின்னடைவு உண்டாகும். மன சஞ்சலம் நீங்க மனசுக்கு பிடித்த பாடல்களை கேளுங்கள். சொந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சோம்பேறித்தனம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த வேளையிலும் மனசு ஈடுபடாது. நல்ல தூங்கி ரெஸ்ட் எடுக்கணும் போல இருக்கும். ஆனா அதற்கான சூழ்நிலையும் அமையாது. இதனால் மிஞ்சப் போவது தலைவலி தான். ஆகவே இன்று உங்களுடைய வேலைகளை முன்கூட்டியே பிளான் செஞ்சுக்கோங்க. கட கடன்னு எல்லா வேலையும் முடிச்சிட்டு பிறகு ஓய்வு எடுப்பது நன்மையை கொடுக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத இடத்தில் இருந்து பணம் வரும். இதனால் உங்கள் கடன் பிரச்சனையை சரி செய்து விடுவீர்கள். மன நிம்மதி பெறுவீர்கள். சில பேருக்கு வேலை செய்யும் இடத்தில் சிக்கல் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காமல் கொஞ்சம் சிரமப்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். இருந்தாலும் பிரச்சனைகளை சமாளிக்க கூடிய தெம்பு உங்களிடத்தில் இருக்கும் அதனால் பெருசாக பாதிப்புகள் வராது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் ரொம்பவும் தெளிவான மனநிலையில் இன்று இருப்பார்கள். குழப்பமான பிரச்சனைகளுக்கு கூட சீக்கிரமாக தீர்வு காணும் புத்திசாலித்தனம் இன்று வெளிப்படும். இதனால் மேல் அதிகாரிகளிடம் பாராட்டும் புகழும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் உங்களுடைய தன்னடக்கத்தை மறந்துடாதீங்க. அடக்கத்தோடு நாம் செய்யக்கூடிய வேலைகள் தான், வாழ்க்கையில் அடுத்தடுத்த லெவலுக்கு நம்மை கொண்டு செல்லும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொன்னாலும் ஒரு பிரச்சனை வரும். சரி என்று சொன்னாலும் பிரச்சனை. இல்லை என்று சொன்னாலும் பிரச்சனை. இன்று நீங்கள் என்ன சொன்னாலும் உங்களை போட்டு புரட்டி வறுத்து எடுக்க தான் பார்ப்பார்கள். ஆகவே எல்லா பிரச்சனைகளுக்கும் தயாராக இருந்துக்கோங்க. மனசை இரும்பை போல மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். சோர்ந்து போய் வாடி போகாதீங்க.

- Advertisement -