இன்றைய ராசிபலன் – 23 மே 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்கு இன்றைய தினம் வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கும். பெரிய மனிதர்களின் தொடர்பால் நன்மைகள் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாராது இருந்த கடன் தொகை வட்டியுடன் வந்து சேரும். ஒரு சிலர் புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியினர் இன்றைய தினம் மனமகிழ்ச்சியுடன் இருப்பார்கள். பண விவகாரங்களில் புதியவர்களுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். தொழில், வியாபாரங்களில் சிறந்த வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் குழப்ப நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். சிலருக்கு எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளை மதியத்திற்கு மேல் தொடங்கலாம். பொருள் வரவு சராசரியான அளவில் இருக்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சராசரியான நிலையே இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் லாபம் ஏதும் இருக்காது.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் தொட்டதெல்லாம் ஜெயமாகும். எதிர்பாராத பண வரவு இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் விருந்து, உபகாரங்களில் கலந்து கொள்வார்கள். சொத்துக்கள் சம்பந்தமான விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் பணியிடங்களில் ஏற்பட்ட பிரச்சனை தீரும். வீட்டில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். உடற்பிணிகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரவு இருக்கும். மக்கள் செல்வாக்கு பெருகும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் மனதில் படபடப்பான நிலை இருக்கும். அரசாங்க ரீதியான காரியங்களில் இழுபறி நிலை நீடிக்கும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கொடுக்கல் – வாங்கலில் பிரச்சனைகள் எழும். வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பப் பிரச்சனைகள் சமூகமான தீரும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். பொருளாதார நிலை உயரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாரா பொருள் வரவு உண்டாகும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். கலைத்தொழில் இருப்பவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு பெறுவார்கள். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். தாராளமான பண வரவு இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் குடும்ப உறவுகளில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பணியிடத்தில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டி இருக்கும். வெளியூர் பயணங்களால் பெரிய லாபங்கள் இருக்காது. சிலருக்கு கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு மருத்துவ ரீதியான செலவுகள் ஏற்படலாம். தம்பதிகளிடையே ஒற்றுமை பெருகும். சிலர் தொலைதூர ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவார்கள்.

- Advertisement -