இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2023

jun 23 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் விலகி நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தொழில் விருத்தி அடைந்து, நல்ல லாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. எவ்வளவு செலவுகள் வந்தாலும் அதற்குரிய வரவுகளும் உங்களை வந்தடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உத்தியோகத்தில் நினைத்ததை சாதிப்பீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. பொது இடங்களில் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது உத்தமம். குடும்ப விவகாரங்களில் பொறுமையை கையாளுங்கள். உத்தியோகத்தில் பட்ட கடன்களுக்கு முடிவு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் பெறுவீர்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. செயல்களில் தெளிவு உண்டாகும். புதிய விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகளை அடைவீர்கள். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அரசு வழி முயற்சிகளுக்கு அனுகூல பலன் பெறுவீர்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முயற்சிகள் பலிதமாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் என்பதால் மனம் மகிழும் படியாக நிகழ்வுகள் நடக்கும். வழக்குகளில் இருந்து சாதக பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்களில் புதிய அனுபவங்கள் கிட்டும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன நிறைவான நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் அப்படியே ஆற போட்டு விடுங்கள். தொழிலில் லாபம் காண புதிய விஷயங்களை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எச்சரிக்கையுடன் இருக்கக்கூடிய நாளாக இருக்கிறது. தேவையற்ற வம்பு, வழக்குகளில் வீணாக மாட்டிக் கொள்ளாதீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு மறையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரித்து காணப்படும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செய்யும் கடமைகளில் சரியாக இருப்பது நல்லது. எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரக்கூடும். வரவுக்கு மீறிய செலவுகளை கையாளுவீர்கள். பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். வாகன பராமரிப்பை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் ஒரு இனம் புரியாத கலக்கம் ஏற்படலாம். ஏதோ ஒன்று இழந்தது போல தென்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் குறையும். தொழிலில் விருத்தி உண்டாக புதிய நபர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய திறமைக்கு மதிப்பு குறையும் எனினும் விடா முயற்சி செய்வது நல்லது.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பதற்கு எதிர்மறாக நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். சிலர் செய்த தவறை எண்ணி குற்ற உணர்ச்சியில் மூழ்கிக் கிடப்பார்கள். சுற்றி இருப்பவர்களை வீணாக பகைத்துக் கொள்ள வேண்டாம். விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போக மாட்டீர்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சல் அதிகரித்து காணக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதையும் மனோ தைரியத்துடன் செயலாற்றுவீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத பயணங்கள் மூலம் மூலம் சாதக பலன் காணலாம். கணவன் மனைவிக்கு இடையே புதிய புரிதல் உண்டாகும். சுய தொழிலில் தங்களுக்கு கீழ் பணி புரிபவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொறுமையை கடைப்பிடியுங்கள்.

- Advertisement -