இன்றைய ராசிபலன் – 23 ஜூலை 2022

today rasi palan 23/07/2022
- Advertisement -

மேஷம்
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். நீங்கள் நினைத்தது நடக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால் நிதானத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பேச்சில் இனிமை தேவை.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எவரையும் நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் நீங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு மன இறுக்கங்கள் குறையும். குடும்பத்தின் மீது அக்கறை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்ததை அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம் பொறுமை தேவை.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவலைகள் மறந்து செயல்படக்கூடிய நாளாக இருக்கிறது. எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் உண்டு என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலுடன் செயல்படக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. எவரையும் தவறாக எடை போடாதீர்கள். கண்களால் காண்பதும் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. வியாபாரிகள் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் கூடுதல் ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. எதையும் வாஞ்சையுடன் அணுகுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுயமாக முடிவெடுக்கும் தைரியம் வேண்டும். கேட்ட இடத்திலிருந்து பணம் வர காலதாமதம் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கு உரிய பாராட்டுக்கள் குவியும். மனப்போராட்டம் படிப்படியாக குறையும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையிலிருந்து பின்வாங்காமல் இருப்பது நல்லது. செய்ய வேண்டியதை யோசிக்காமல் செய்து விடுங்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு சிறந்த நாளாக இருக்கும். மனதில் இருந்து வந்த கேள்விகளுக்கான விடையை நீங்களே தேடுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உங்கள் கடமையை மேலும் சிறப்பாக செயலாற்ற முயற்சி செய்வீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பழைய கடன் பிரச்சனை தீரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகளை வலுவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை உயரும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சிரமமான வேலையும் சுலபமாக முடிய கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அலுவலக ரகசியங்களை கட்டி காப்பது நல்லது. புதிய நண்பர்களின் சேர்க்கையில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தேவையற்ற விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் உங்கள் லட்சியத்தை நோக்கி பயணிப்பது நல்லது. சுப காரியம் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேகத்தை விட விவேகம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் அனுபவ அறிவை பயன்படுத்தி வெற்றிகளை குவிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு கடினமான வேலையும் சுலபமாக தெரியக்கூடும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். பண விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். அரசு வழி காரியங்களில் காலதாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்த அளவிற்கு லாபம் வரும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய சிந்தனைகள் உதிக்கக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமையில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளிவட்டார புது அனுபவம் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு தகுந்த சமயத்தில் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.

- Advertisement -