இன்றைய ராசிபலன் – 23 ஆகஸ்ட் 2022

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கப் போகின்றது. சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, சுறுசுறுப்பாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பகல் நேரத்தில் ஓய்வு எடுக்கலாம், தூங்கலாம் என்ற எண்ணத்தை தூர தூக்கி போடுங்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கிறது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத நன்மை நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நிறைய வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரக்கூடிய நாளாகத்தான் இருக்கப் போகின்றது. நிறைய விஷயங்களில் வெற்றி உங்களை தேடி வரும். ஆனால் நுனி மூக்கில் இருக்கும் கோபம் உங்கள் வெற்றியை பின்னுக்கு தள்ளிவிடும். பொறுமை நிதானம் அவசியம் தேவை. வார்த்தைகளில் கவனம் தேவை.

கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் சவால்களை எதிர்கொள்ளும் நாளாக இருக்கப் போகின்றது. பிரச்சனைகள் உங்களை சூழ்ந்து வந்தாலும், உங்களுடைய சாமர்த்தியத்தால் அதை ஜெயித்து விடுவீர்கள். அறிவாற்றல் வெளிப்படக்கூடிய நாள். உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத ஒரு நல்லதை இன்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக முயற்சி செய்து முடியாத காரியங்கள் கூட, இன்று நல்லபடியாக நடந்து முடியும். வீண் செலவுகள் அதிகரிக்கும். பண பற்றாக்குறை ஏற்படும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கப் போகின்றது. சோம்பேறித்தனத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, சுறுசுறுப்பாக வேலை செய்து அடுத்தவர்களின் பாராட்டையும் புகழையும் பெறுவீர்கள். உங்களுடைய இலக்குகள் எது என்று தெரிந்து அதை நோக்கி சரியான வழியில் பயணம் செய்வீர்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சின்ன சின்ன தடைகளோடு தான் இருக்கும். எந்த வேலையை முயற்சி செய்தாலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்காது. ஆனால் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும்போது வெற்றி உங்களைத் தேடி வரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். வேலையை முடித்துவிட்டு நல்ல பெயரும் வாங்குவீர்கள். அதிக வேலை செய்ததால் உடல் சோர்வு ஏற்படும். ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் உண்டாகும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் வெற்றி தரும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். சம்பள உயர்வு, பதவி உயர்வு வருவதற்கு கூட நிறைய வாய்ப்புகள் உள்ளது. சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அதை மன தைரியத்தோடு எதிர்த்து வெற்றி காண்பீர்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கப் போகின்றது. சில விஷயங்களை அடம்பிடித்து சாதிப்பீர்கள். எது நல்லது எது கெட்டது என்று தெரியாமல் ஏதோ ஒரு கண்மூடித்தனமான முடிவையும் எடுக்க நேரிடும். இருப்பினும் பாதிப்புகள் எதுவும் வராது. முன்யோசனை இல்லாமல் எந்த வேலையையும் செய்யாமல் இருப்பது நல்லது.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்பவும் சோம்பேறித்தனமான நாளாக இருக்க போகின்றது. மன குழப்பம் இருக்கும். தெளிவு இல்லாமல் பித்து பிடிப்பது போல இருப்பீர்கள். இருப்பினும் உங்களுடைய அன்றாட வேலையில் எந்த ஒரு பாதிப்பும் வராமல் இருக்க கடின உழைப்பை மூலதனமாக போட வேண்டும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்தோடு தொடங்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலைகளை கொஞ்சம் கவனமாக செய்யுங்கள். மனதை அலைபாய விடாமல் ஒருநிலை படுத்த வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. பின் விளைவுகளை சிந்தித்து செயல்பட்டால் பிரச்சனை இல்லை.

- Advertisement -