இன்றைய ராசிபலன் – 23 டிசம்பர் 2023

Rasi-palan23
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பண விஷயத்தில் கவனம் இருக்க வேண்டும். உங்களுக்கு நேரம் காலமும் நன்றாக இருக்கிறது. ஆனால், அடுத்தவர்களுடைய பேச்சைக் கேட்டு ஏமாற வாய்ப்புகள் உள்ளது. ஆகவே தேன் ஒழுக பேசுபவர்களை நம்பாதீங்க. உங்களுக்கு இது நல்லது என்று, திட்டி சொல்பவர்களை உதாசீனப்படுத்தாதீங்க. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. குறிப்பா உங்களுடைய வாழ்க்கைத் துணை உங்களுக்கு கெடுதல் சொல்ல மாட்டாங்க. மனிவியை நம்பி இருந்தால் நன்மை நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் கொஞ்சம் அதிகமாக வெளிவரும். இதனால் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும். நிறைய எதிரிகளை சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆகவே கொஞ்சம் கவனத்தோடு நடந்து கொள்ளவும். குறிப்பாக நமக்கு மேல் பதவியில் இருப்பவர்களை நாம் எதிர்த்துக் கொள்ளக் கூடாது. தந்திரமாக நடந்து கொண்டால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். சட்டைக்கு கஞ்சி போட்டது போல விரைப்பாக இருக்காதீங்க. இன்னைக்கு கொஞ்சம் லூஸ் விடுங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். எந்த வேலையிலும் சுறுசுறுப்பாக ஈடுபட மாட்டீங்க. இதனால் வேலையில் பின்னடைவு ஏற்படும். மேலதிகாரிகள் கட்டாயம் திட்டுவாங்க‌. மேனேஜர், டீம் லீடரிடம் சின்ன சின்ன திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பிறகு வேறு வழியில்லாமல் எல்லா வேலையும் முடிக்க கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். மாலை நேரம் போல மனதை அமைதி படுத்த கோவிலுக்கு செல்லவும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலையை செய்வீர்கள். ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய வேலையை கூட இன்றே முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுக்க வேண்டும் என்று பிளான் செய்வீங்க. இன்றைய நாள் உங்களுக்கு சுறுசுறுப்பாக செல்லும். உடல் அசதி கொஞ்சம் இருக்கும். நேரா நேரத்திற்கு சரியாக சாப்பிடுங்க. ஆரோக்கியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஏதோ ஒரு சந்தோஷமான தருணத்தை நினைத்து காத்துக் கொண்டு இருக்க போகிறீர்கள். அது உங்களுக்கு இன்பத்தை கொடுக்கும். கவலை படாதீங்க, பழைய நினைவுகள் திரும்பும். பழைய காதலியின் நினைவு திரும்பினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சுகமான இந்த சுமை இன்றைய நாளை நடத்திச் செல்லும். மற்றபடி வேலை தொழில் எல்லாம் வழக்கம் போல இருக்கும் ‌

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று எதையும் பெருசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதாவது சட்டு சட்டுனு மூட் அவுட் ஆகாதீங்க. விளையாட்டான விஷயத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். கேலி கிண்டல் செய்பவர்களிடம் சண்டை போட்டு பிரச்சனையை பெரிசாக்க கூடாது. இன்று உங்கள் கண்களில் படுபவர்கள் எல்லாம் எதிரி போலவே தோன்றுவார்கள். எரிச்சலோடு தான் இன்றைய நாள் கடந்து செல்ல போகின்றது. மனதை அமைதியாக வைக்க ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை சொல்லவும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். சமையலறையில் வேலை செய்யும் பெண்கள் கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்கவும். வண்டி வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் போட்டுக்கோங்க. சின்ன சின்ன காயம் பட வாய்ப்புகள் உள்ளது. பர்ஸில் பயணம் செய்யும்போது, படிக்கட்டில் தொங்குவது போன்ற ஆபத்தான விஷயங்களை மறந்தும் செய்ய வேண்டாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தை தேடி ஓடும். கோவிலுக்கு சென்று கொஞ்ச நேரத்தை செலவு செய்வீர்கள். மற்றபடி வேலை, அலுவலகப் பணி எல்லாம் சரியாக செல்லும். குடும்ப விஷயங்களில் சில சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. சுப காரிய நிகழ்ச்சிகள் பேச்சுவார்த்தையை தள்ளிப் போடுங்கள். வீட்டில் உங்களுடைய பிள்ளைக்கு பிடிக்காத திருமணம், படிப்பு போன்றவற்றில் ரொம்பவும் டார்ச்சர் கொடுக்காதீங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று யோசனை அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப் போகின்றோம் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை நல்லது தான். இருந்தாலும் இன்றைய நாள் வேலையை விட்டுவிட்டு எப்போதும் கவலையோடு இருப்பது சரியாக இருக்காது. ஆகவே புத்துணர்ச்சியோடு உங்களுடைய இன்றைய வேலையை தொடங்க என்ன செய்யணுமோ, அதை செய்யுங்க. மனதிற்கு பிடித்தவர்களிடம் உங்கள் பாரத்தை இறக்கி வையுங்கள். இஷ்ட தெய்வ வழிபாடு செய்யுங்கள். நல்லது நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று எல்லாம் பிளான் பண்ண படி நல்லபடியாக நடந்து முடியும். இன்றைய நாள் உங்களுக்கு வெற்றியை தரக்கூடிய நாளாக அமையும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இன்னைக்கு இன்டர்வியூக்கு போறவங்களுக்கு வெற்றி உண்டு. ஆகவே எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். யாரை நம்பியும் எந்த ஒரு சாட்சியும் இல்லாமல் பணத்தை கடன் கொடுக்க வேண்டாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எதையும் செய்யக்கூடாது. முன்பின் தெரியாதவர்களை நம்பி எந்த ஒரு தெரியாத விஷயத்திலும் காலை வைக்காதீங்க. மாமனார் வழி உறவுகளோடு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. ஆகவே அவர்களோடு கொஞ்சம் பொறுமையாக பேசவும். பயணத்தின் போது கவனம் இருக்கட்டும். ஆன்லைன் பிசினஸில் முதலீடு செய்ய வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். நீங்கள் நினைத்தபடி எல்லா வேலையையும் செய்து முடிப்பீர்கள். மனைவி பிள்ளைகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையில் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கட்டும். உங்களுடன் வேலை செய்பவர்களாக இருந்தாலும், அவர்களை முழுசாக நம்பி எல்லா விஷயத்தையும் உளறி கொட்டாதிங்க. உங்கள் வேலைக்கு அவர்கள் பிரச்சனை வைத்து விடுவார்கள். சில விஷயங்களில் ஒளிவு மறைவு இருந்தால் தான் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவும்.

- Advertisement -