இன்றைய ராசிபலன் – 24 ஜனவரி 2024

Rasi-palan-new24
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று முன்கோபப்படுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். கோபத்தால் உங்களுக்கு பெரிய இழப்புகள் வர வாய்ப்பு உள்ளது. கோபத்தை அடக்க மனசுக்குள் உங்களுக்கு பிடித்த மந்திரத்தை சொல்லுங்கள். பிடித்த தெய்வத்தின் பெயர்களை சொன்னாலும் சரிதான். இன்று பொறுமையை கடைப்பிடித்தால் நிச்சயம் நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில், மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. தொழிலில் பார்ட்னரை பகைத்துக் கொள்ளக்கூடாது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகள் சக நண்பர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது அவ்வளவுதான்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய புது ஐடியாக்களை சொல்லுங்கள். அது சக்சஸ் ஆகும். இதனால் பாராட்டுகள் கிடைக்கும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் உங்களுடைய விற்பனையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதற்காக நல்ல விளம்பரங்களை செய்யலாம். இதன் மூலம் நிறைய லாபம் தரக்கூடிய விஷயம் இன்றைக்கு உங்களுக்கு நடக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் என்று கண்மூடித்தனமாக அடுத்தவர்களை நம்பாதீர்கள். உங்களுக்கு உங்கள் மேலே நம்பிக்கை வர வேண்டும். நம்பிக்கை இல்லாமல் நீங்கள் செய்யக்கூடிய காரியத்தை தயவுசெய்து கைவிட்டு விடுங்கள். மனைவிக்காக செய்தேன், கணவருக்காக செய்தேன் என்றெல்லாம் இன்று அடுத்தவர்களை நீங்கள் குறை சொல்லக்கூடாது. உங்களுக்காக மட்டும் வாழ வேண்டிய நாள் இது. பிடிக்காத விஷயத்திற்கு தைரியமாக வேண்டாம் என்று சொல்ல பழகிக் கொள்ளுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று தெரியாமல் ஏதாவது தவறு செய்து விட்டால் அதை நினைத்து மனம் உடைந்து நொந்து போய் அமரக்கூடாது. தவறுகளை திருத்திக் கொள்ள வழியை தேட வேண்டும். அப்போதுதான் முன்னேற்றம் இருக்கும். சோர்ந்து போய் கஷ்டம் கஷ்டம் என்று உட்காருபவர்களுக்கு என்று தோல்வி மட்டும்தான் கிடைக்கும். எதைக் கண்டும் பயப்படாதீங்க. உங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள் உங்களுக்கு இன்று நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கோபம் வரும். ஆனால் அதை வெளிக்காட்ட முடியாது. கோபத்தை அடக்கி வச்சிட்டு, கோபத்தை வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையில் சிக்கிக் கொள்வீர்கள். மேலதிகாரிகளிடம் கன்னா பின்னான்னு திட்டு வாங்குறீங்க. அவரை எதிர்த்து பேச முடியுமா. நிச்சயம் முடியாது. ஓரளவுக்கு சக ஊழியர்கள் என்றால் திருப்பி திட்டி விடலாம். இரண்டு மூன்று லெவலுக்கு மேலே இருக்கும் உயர் அதிகாரிகளிடம் இன்று சிக்க போறீங்க. கொஞ்சம் திறமையா யோசிங்க. டேலண்ட் வெளிப்படுத்துங்க நல்லது நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன கஷ்டங்கள் வரும். ஆனால் கடவுள் உங்களை காப்பாற்றி கை தூக்கி விடுவார். கவலைப்படாதீங்க. சிக்கலான விஷயத்தில் சிக்கலான சூழ்நிலையில் சிக்கித் தவித்து நம்ம கதை முடிஞ்சது என்று தீர்மானம் செய்து விடுவீர்கள். கடைசி நேரத்தில் ஏதோ ஒரு ரூபத்தில் உங்களை காப்பாற்ற ஒரு ஜீவன் வரும். அந்த ஜீவனுக்கு நன்றியை சொல்லுங்க. பார்த்து பக்குவமா இன்று உஷாரா இருங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள் என்று நிறைவேற வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாள் வாங்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட நகைகள் வண்டி அல்லது, வேறு ஏதாவது அழகான ஆடை, ஏதாவது பொருளை வாங்குவீர்கள். அதற்கான நிதி நிலைமையும் உங்களுக்கு சீராக இருக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இன்றைய நாள் முழுவதும் உங்கள் வாழ்க்கை புதுசா பூத்த ரோஜா பூ போல இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமை அவசியம் தேவை. அவசர அவசரமாக எந்த ஒரு வேலையையும் செய்யாதீங்க. லேட் ஆகும் உயர் அதிகாரிகளிடம் திட்டுக் கிடைக்கும் என்ற நிலைமை வந்தாலும் கூட, அவசர அவசரமா தப்பு தப்பா எதையாவது செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள். லேட்டா ஆன காரணத்தை சொல்லி சமாளிக்கலாம். ஆனால் தவறான காரியத்தை செய்து தலை குனிந்து நிற்கக்கூடாது கவனம் தேவை.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று காலை எழுந்ததிலிருந்தே ஓட்டம் இருக்கும். உங்களுடைய வேலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஓடுகின்ற ஆற்றில் தண்ணீர் எப்படி இருக்கும் அதுபோல இன்று உங்கள் வாழ்க்கை அது பாட்டுக்கு போகும். கவலையே படாதீங்க. அதுபோன போக்கில் விட்டுடுங்க. உங்களுடைய கடமைகளில் இருந்து மட்டும் தவறாமல் இருங்கள் போதும். மற்றதை எல்லாம் இன்று விதி பார்த்துக் கொள்ளும் உங்கள் கையில் எதுவுமே கிடையாது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பாராட்டுகள் கிடைக்கும். இதை நான்தான் செய்தேனா? எதற்கு என்னை எல்லோரும் பாராட்டுகிறார்கள். என்று நீங்களே யோசிப்பீங்க. மெடல் எல்லாம் கிடைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அல்லது சின்னதா வெரி குட் அப்படி என்று பாஸ் சொன்னாலும் கவலை படாதீங்க இரண்டுமே உங்களுக்கு கிரீடம் வைத்தது போல தான்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது மகிழ்ச்சியாக இருக்க போகின்றது. எதனால் மகிழ்ச்சி வந்தது என்று தெரியாது. ஆனால் மனநிறைவோடு எல்லா வேலையையும் செய்வீர்கள். இதனால் புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். உங்கள் பக்கத்தில் இருப்பவர்களை கூட இன்று நீங்கள் சந்தோஷமாக வச்சுக்குவீங்க. ஆகவே இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். முடிந்தால் இன்று மாலை குடும்பத்தோடு கோவிலுக்கு போயிட்டு வாங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். சில பேருக்கு டீம் லீடர் மேனேஜரை சமாளிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். எப்படா இவங்க நம்மை விட்டு போவாங்க என்று யோசிப்பீங்க. கவலைப்படாதீங்க, இருந்தாலும் இன்று உங்களுக்கு நிறைய நல்லது நடக்கப் போகிறது. ரொம்பவும் கஷ்டப்பட்டு முயற்சி செய்து துவண்டு போய், இருக்கும் சூழ்நிலையில் இன்றைய நாள் இறுதியில் நிச்சயம் ஒரு நல்லது உங்களுக்கு நடக்கும்.

- Advertisement -