இன்றைய ராசிபலன் – 24 பிப்ரவரி 2023

feb 24 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. நீங்கள் எடுத்த காரியம் வெற்றி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நபர்களின் மூலம் சாதக பலன் கிட்டும். உத்தியோகத்தில் மாற்றங்கள் ஏற்படும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் தோன்றி மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பகைவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிகளில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மன அமைதி நீடிக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்றவர்களின் விஷயத்தில் வலிய சென்று மூக்கை நுழைக்காதீர்கள். சுய தொழிலில் லாபம் காண புதிய விஷயங்களை கையாளுவீரகள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பயனற்ற பேச்சு வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. எதிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவது உத்தமம். சுய தொழிலில் உங்களுடைய அனுபவ அறிவை வெளிப்படுத்தக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடினமான காரியத்தை கூட எளிதாக செய்து முடிக்கும் வாய்ப்பு உண்டு.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அரசு வழி காரியங்களில் ஆதாயம் காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவி உறவுக்கு இடையே புதிய நட்பு மலரக்கூடிய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் எதிர்பாராத அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி நிறைந்த நாளாக இருக்கிறது.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்களுடைய திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் சுற்றியிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பகையை வளர்க்காதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மன கசப்புகள் தீரும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்களுடைய நட்பு வட்டம் விரிவடையும். புதிய நபர்களை சந்திக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்கள் இதுவரை சந்தித்து வந்த நெருக்கடிகளில் இருந்து ஓய்வு காண போகிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிந்தித்து செயல்படுங்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த புரிதல் மாறுபடும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கடினமான சவால் நிறைந்த காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப ஒற்றுமைக்கு விட்டுக் கொடுத்து செல்லுங்கள். இறை வழிபாடுகளில் அதிகம் நாட்டம் செலுத்துவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சமயோசித புத்தியால் வரயிருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன பயம் நீங்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வாகன பயணங்களில் கவனம் செலுத்துங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு குறித்த விஷயத்தில் சாதக பலன் கிடைக்கப் போகிறது.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த பனிப்போர் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களுடைய அனுபவங்கள் மென்மேலும் வளர போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வர வாய்ப்புகள் உண்டு. மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிரிகள் தொல்லை குறையும்.

- Advertisement -