இன்றைய ராசிபலன் – 24 பிப்ரவரி 2024

Rasi-palan-new24
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். யாரெல்லாம் உங்களை ரொம்பவும் தரை குறைவாக பேசினார்களோ, அவர்களுக்கு எல்லாம் தக்க பதிலடி கொடுக்கக் கூடிய நாள் இது. யாரை கண்டு பயப்படாதீங்க. முகத்துக்கு நேராக நின்று பேசுங்க‌. நிச்சயம் உங்களுக்கே வெற்றி கிடைக்கும். வாழ்க்கை துணை சொல்லுவதை கேட்டு நடக்கவும். குடும்ப விஷயங்களில் மட்டும் வாக்குவாதம் செய்யாதீங்க.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு தகுந்தது போல மேல் அதிகாரிகள் சில விஷயங்களை மாற்றிக் கொடுப்பார்கள். இதனால் மனது சந்தோஷப்படும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இன்றைக்கு உங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் வந்தால் அதற்கு உதவி செய்ய நண்பர்களும் உறவுகளும் வரிசை கட்டி நிற்பார்கள். இதனால் அவர்களுடைய அருமை பெருமைகளை புரிந்து கொள்வீர்கள். மனநிறைவை பெறுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். டென்ஷன் நிறைந்த நாளாக தான் இருக்கப்போகின்றது. அதனால் காலையிலேயே எல்லா வேலையும் சரியாக பிளான் பண்ணிக்கோங்க. கொஞ்சம் முன்கூட்டியே வேலைக்கு கிளம்பனும். சோம்பேறித்தனம் படாமல் முன்கூட்டியே எல்லா வேலைகளையும் செய்து வைத்துவிட்டால், தேவையற்ற டென்ஷனில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். சொந்த தொழிலிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அலட்சியத்தோடு நடந்துக்காதிங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக தான் இருக்க போகின்றது. எல்லா விஷயத்தையும் பொறுமையாக முடிவு எடுங்கள். அவசரப்படாதீர்கள், அவசரம் இன்று உங்களுக்கு பெரிய பிரச்சனையை கொடுத்து விடும். மேலதிகாரிகளிடம் பணிவாக பேசுங்கள். அவர்கள் சொல்வதை காதில் கேட்டுக் கொண்டு பதில் சொல்லவும். குறுக்க குறுக்க பேசினாலும், நஷ்டம் உங்களுக்கு தான்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும். இல்லாட்டி ஆப்பு நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்குவது, வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களிடம் சண்டை வருவது போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவும். கணக்கு வழக்குகளை பார்ட்னர் பார்த்தாலும், பார்க்கட்டும். உங்களுடைய பங்குக்கு நீங்களும் ஒருமுறை சரிபாருங்க. ஏமாளியா நிற்காதீங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. முன்கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். ஆழம் தெரியாமல் கால வைக்காதீங்க. பிறகு காலை பின்னுக்கு எடுக்கவே முடியாத சூழ்நிலை உண்டாவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. நண்பர்கள் உறவுகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து நடக்கணும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதிய தொழில் தொடங்குவது, புதிய வேலைக்கு செல்வது போன்ற விஷயங்களை செய்யலாம். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். மனைவிக்கு பிடித்த பொருளை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சி அடையச் செய்வீர்கள். நிதி நிலைமை உயரும். வாரா கடன் வசூல் ஆகும்.

விருச்சிகம்


விருச்சக ராசிக்காரர்கள் முக்கிய முடிவு எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். இன்று அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாதீங்க. யாரோ ஒருவர் வீதியில் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் உங்களுடைய வேலையை பார்த்துக் கொண்டு செல்லவும். நல்லது செய்வதாக நினைத்து உதவிக்கு போனால் உபத்திரம் உங்களுக்கு தான்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. வேலையில் வெற்றி, தொழிலில் வெற்றி, என்று சந்தோஷமாக இந்த நாளை கடந்து செல்வீர்கள். ஆனால் வீட்டில் இருப்பவர்களுடைய நலனில் அக்கறை காட்டவும். வேலை வேலை என்று இருந்து, குடும்பத்தை கவனிக்காமல் விடக்கூடாது. இதனால் வீட்டில் கணவன் மனைவி சண்டை வர வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தின் மீதும் ஒரு கண்ண வையுங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும். இடமாற்றம் தேவைப்படாது. இருக்கிற இடத்திலேயே சரியாக வேலை செய்யவும். வீடு மாற்றுவது வேலை மாற்றுவது போன்ற புது சிந்தனைகளை இன்று செய்யாதீர்கள். இன்று அதிகப்படியாக காசு கொடுத்து எந்த பொருளையும் வாங்காதீங்க. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு இன்று சாதகமான நாள் அல்ல. ஏதாவது நஷ்டம் வர வாய்ப்பு இருக்கு ஜாக்கிரதை.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் முழுசாக கவனத்தை செலுத்த முடியாது. இதனால் டென்ஷன் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கை துணையிடம் முன்கோபத்தை காட்டாதீங்க. குடும்ப உறவுகளிடம் நாசுக்காக நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் சண்டை வர வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அலட்சியமாக செய்யக்கூடிய வேலை அனாவசிய பிரச்சனைகளை இழுத்துக்கொண்டு வரும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். வெளியில் சென்று சில விஷயங்களை சாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த டார்கெட்டை இன்று சரியாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கத்தில் சீரான போக்கு நிலவும். செலவுக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். ஆடம்பர செலவை மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கோங்க. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

- Advertisement -