இன்றைய ராசிபலன் – 24 மார்ச் 2023

mar 24 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது நடக்கும் என்றாலும் நல்லது கெட்டது சேர்ந்தே சந்திக்க வேண்டி இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான உயர்வு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு லாபத்தை பெறுவதில் இடையூறுகள் ஏற்படும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அலட்சியமாக இருப்பது வேண்டாம். பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சில தடைகளை தாண்டிய முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆடம்பர பொருட்களை கையாளுவதில் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்குள் இருக்கும் புரிதல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் அனுசரிப்புத் தன்மையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தொலைவிலிருந்து சுபச்செய்தி பெறுவீர்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மாற்றங்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறவுகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெரிய நபர்களின் சந்திப்பு உண்டாகும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகை கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நெருங்கிய உறவுகளிடம் முன்கோபத்தை காண்பிக்காதீர்கள். சுப காரியங்களில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கூட்டாளிகளால் சில சங்கடங்கள் வரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தீராத பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்.

கன்னி:
கன்னியை பிறந்தவர்களுக்கு இந்த நாள் டென்ஷனுடன் காணப்படுவீர்கள். சாதகமற்ற அமைப்பு என்பதால் முக்கிய முடிவுகளை தள்ளி வையுங்கள். சுய தொழிலில் நீங்கள் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ ரீதியான வீண் விரயங்கள் வரலாம்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியுடன் காணக்கூடிய யோகமான அமைப்பாக இருக்கிறது. சுப காரியங்களில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வருமானத்தை அதிகரிக்க கூடிய புதிய யுக்திகள் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவுகள் குறையும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய கருத்துக்களில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. தேவையற்ற விமர்சனங்களை மனதில் கொள்ளாதீர்கள். சுய தொழிலில் நினைத்த லாபம் அடையலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நஷ்டம் வரலாம் ஜாக்கிரதை.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறவுகளுக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் சில இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிறைவு இருக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். அனாவசிய எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவை அறிந்து உதவி செய்வீர்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொட்ட காரியங்கள் ஜெயமாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் பொறுப்புகளை அலட்சியம் செய்யாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் பொது காரியங்களில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத ஆசையால் அவஸ்தைப்பட நேரிடும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே மகிழ்ச்சி நிறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

- Advertisement -