இன்றைய ராசிபலன் – 24 மார்ச் 2024

Rasi-palan-new24
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. புதிய தொழில் தொடங்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதுசாக வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நீண்ட நாள் கடன் வசூல் ஆகும். சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன பயம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுக்க முடியாது. சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று நல்லது நடக்கும். உறவினர்களுடன் ஒற்றுமை நிலவும். சுப செலவுகள் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. பெருசாக பிரச்சனை இருக்காது. எல்லா வேலைகளும் நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். மனைவி குழந்தைகளோடு இன்று மாலை வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று விடுமுறை நாளாகவே இருந்தாலும் ஓய்வு கிடைக்காது. ஆக்கபூர்வமான ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருப்பீர்கள். அதன் மூலம் உங்களுக்கு நல்லதும் நடக்கும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். கஷ்டப்பட்டதற்கான பலனை அடைவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான அத்தனை வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லது நடக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நடக்காத நல்ல காரியம் இன்று நடந்து முடியும். மனதுக்கு இதமான, மனதிற்கு பிடித்த நபர்களை சந்திப்பீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சந்தோஷம் நிறைந்த இந்த நன்னாளில் குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்யுங்கள். இறைவனின் ஆசிர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. உங்களிடம் வந்து பேசுபவர்கள் எல்லாம் உங்களுக்கான நல்ல அறிவுரைகளை வழங்குவார்கள். தவறான முடிவுகளை எடுக்க இருந்த நீங்கள் கடைசி நிமிடத்தில் சரியான முடிவு எடுத்து பிரச்சனையிலிருந்து தப்பிப்பீர்கள். உங்களுடைய சிந்தனை உங்களை தவறான பாதைக்கு போக விடாது. நல்ல அனுபவங்களை இன்று சந்திக்க வாய்ப்புகள் உள்ளது பார்த்துக்கோங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய எதிரிகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது. யாரையும் எதிர்த்துக் கொள்ள வேண்டாம். கோபத்தோடு பேச வேண்டாம். பகைவர்களையும், நண்பர்களாக மாற்றக்கூடிய வித்தையை கற்று வைத்துக் கொள்ளுங்கள். வார்த்தைகளில் நிதானம் தேவை. குறிப்பாக கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்கவும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொகை உங்கள் கையை வந்து சேரும். மனமகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய பிரச்சனைகளை சரி செய்து கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலை விரிவு படுத்தலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்க போகின்றது. சக மனிதர்கள் மத்தியில் நீங்கள் மட்டும் தனியாக தெரிவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத வரவு நிதி நிலைமையை சீர் படித்தி விடும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய திறமையை பாராட்டி பரிசுகள் வழங்குவார்கள். கலைஞர்களுக்கு இன்று ஊக்குவிக்கப்படக்கூடிய நாளாக அமையும். உங்களுடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் இருந்து வந்த மாமியார் மருமகள் சண்டை ஒரு முடிவுக்கு வரும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். பதிவு உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். புதிய முதலீட்டை செய்யலாம். வங்கி கடனுக்கு முயற்சி செய்யலாம். எதிர்காலத்துக்கு தேவையான நல்லதை இன்று செய்வீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். இருந்தாலும் பம்பரமாக சுற்றி எல்லா வேலையும் செய்து முடித்து விடுவீர்கள். வாழ்க்கைத் துணையிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்ய வாய்ப்புகள் உள்ளது. வருமானம் அதிகரிக்கும். செலவை சமாளிக்கும் அளவுக்கு கையில் காசு இருந்தாலே பிரச்சனையில் பாதி முடிந்து விடும். இந்த சண்டேவை என்ஜாய் பண்ணுவீங்க.

- Advertisement -