இன்றைய ராசிபலன் – 24 ஏப்ரல் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்று அனைத்து காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தினருடன் வீண் விவாதங்களில் ஈடுபடக் கூடாது. தொழில், வியாபாரங்களில் நல்ல வருமானம் இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் உங்களின் தனித்தன்மை வெளிப்படும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். முயற்சிகளில் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்று எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வாகனங்களில் பயணிக்கும் பொழுது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சராசரியான வருமானம் இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்று நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத பணவரவு இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் திறமையால் புது பதவிகள் பெறுவார்கள். குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்குவீர்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்று மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். புது தொழில், முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் சிலருக்கு பொருள் வரவு ஏற்படும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்று எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். மகான்களின் ஆசிகளை பெறுவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு உண்டு. சிலருக்கு உடல் சோர்வு ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் இருக்கும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் பணிச்சுமை அதிகரிக்கும். செயல்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகும். கடன் தொகை வந்து சேருவதில் இழுபறி நிலை இருக்கும். புதிய தொழில், வியாபார முயற்சிகளில் இறங்க வேண்டாம். சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் விலகிச் சென்ற நபர்கள் உறவு கொண்டாடுவார்கள். உடல் மற்றும் மனதளவில் உற்சாகம் அதிகரிக்கும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். எதிர்பாராத அளவில் வருமானம் இருக்கும். விருந்து உபகாரங்களில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு:
தனுசு ராசியினர் இன்றைய தினம் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். வீட்டில் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்கள் கடைசி நேரத்தில் தோல்வியடையும். எடுக்கும் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். சிலருக்கு உடல்நல பிரச்சனைகள் தோன்றும். இன்று பிறருக்கு கடன் கொடுக்கக் கூடாது. பெண்கள் தொடர்பான விடயங்களில் எச்சரிக்கை அவசியம்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் முயற்சிகளில் இழுபறி நிலை நீடிக்கும். சிலர் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாவர்கள். கோர்ட் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். எதிலும் நிதானம் அவசியம். பிறருடனான பண விவகாரங்களில் கவனம் தேவை.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் பயணங்களால் ஆதாயம் இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வீட்டில் குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

- Advertisement -