இன்றைய ராசிபலன் – 24 ஏப்ரல் 2024

Rasi-palan-new24
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். தொழிலில் முதலீடு செய்யும் போது கவனமாக இருங்கள். முன்பின் தெரியாத நபருக்கு கடன் கொடுக்காதீங்க. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தை மூன்றாவது நபரிடம் பகிர வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். சின்ன சின்ன தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலதிகாரிகளை கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். உடன் வேலை செய்பவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். தொழிலில் எதிர்பாராத திருப்பம் இருக்கும். அது உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுப செலவுகள் உண்டாகும். பிரிந்து போன உறவு ஒன்று சேரும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப அமைதியான நாளாக இருக்கப் போகின்றது. வேண்டுமென்றே உங்களை யாராவது சீண்டினாலும் அதற்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். அதுவும் ரொம்ப ரொம்ப அமைதியாக, சாந்தமான முகத்தோடு சரமாரியாக சரவெடி வெடிக்க போகும் நாள் இது. எதிரிகள் உங்களைக் கண்டு பயப்படுவார்கள். போட்டிகளில் வெற்றி காண்பீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று உதவிகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத நபர் செய்யும் உதவி உங்களுக்கு ரொம்பவும் நல்லதை செய்யும். மனிதர்களுடைய அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். வண்டி வாகனங்களில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருங்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். கூடுமானவரை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய நீராகாரங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதிகப்படியான வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். அன்றாட வேலைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் போதும். பெரியவர்கள் சொல்பேச்சு கேட்டு நடக்கவும். அடம் பிடித்து இன்று எந்த முடிவையும் எடுக்காதீங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். எதிரிகளை சமாளிப்பதிலேயே உங்களுக்கு பாதி நேரம் போய்விடும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் நடக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்யூன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிய சிந்தனை பெற்றவர்களுக்கு அதிகமாக இருக்கும். அவர்களுடைய முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட நாட்களாக நடக்காத காரியங்களை இன்று கையில் எடுக்கும் போது நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இழுப்பறியாக இருக்கும் கோர்ட் கேசுகளுக்கு இன்று ஒரு முடிவு தெரியும். வியாபாரத்தில் புது முயற்சிகள் நிறைய லாபத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அதிகம் சூடு தரும், சீக்கிரம் ஜீரணம் ஆகாத பொருட்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரும். மாமியார் மருமகள் உறவுகளுக்குள் விரிசல் வர வாய்ப்பு உள்ளது. ஆகவே வீட்டில் இருக்கும் பெண்கள் இன்று பொறுமை காக்கவும். அனாவசியமாக யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். பிரச்சனை என்று வந்தால் கூட பெண்கள் விட்டுக்கொடுத்து நல்லது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன பயம் கொஞ்சம் இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சில பேருக்கு பொய் சொல்லக்கூடிய வாய்ப்புகள் கூட வரலாம். இதனால் மனம் சஞ்சலம் அடையும். எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்தோடு இருக்க முடியாது. கூடுமானவரை நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். அடுத்தவர்கள் முன்பு கைகட்டி நின்று பதில் சொல்லும் அளவுக்கு பிரச்சனைகளை இழுத்துட்டு போகாதீங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாக கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்களின் சந்திப்பு உங்களை உற்சாகப்படுத்தும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். கடன் பிரச்சனையிலிருந்து வெளிவரலாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப பொறுமை இருக்கும். நிதானதோடு சிந்தித்து நிறைய நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்திற்கு நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்களை சாதாரணமாக சரி செய்து விடுவீர்கள். பாராட்டுக்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். அமைதியாக இருந்தால் பொறுமையாக இருந்தால் எத்தனை நல்லது வரும் என்பதை இன்று நீங்கள் அனுபவபூர்வமாக உணர்வீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். பெருமையாக காலரை தூக்கிவிட்டுக் கொண்டு வளம் வருவீர்கள். எதிரிகளின் மீது ஒரு கண் வச்சுக்கோங்க. உங்கள் முன்னேற்றத்தை பார்த்து கண் வைக்கவும் அந்த முன்னேற்றத்தை தடுக்கவும் சில பேர் வருவாங்க. அது நண்பர்களாக இருக்கலாம், உறவினர்களாக இருக்கலாம், தெரியாதவர்களாக கூட இருக்கலாம். அதையெல்லாம் தொலைநோக்கு பார்வையோடு கவனித்து செயல்படுங்கள்.

- Advertisement -