இன்றைய ராசிபலன் – 24 ஜூன் 2022

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இன்று எது நடந்தாலும் நல்லதுக்கே என்று உங்களுடைய மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக வம்பு தும்புக்கும் செல்ல வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு இருந்தால் பிரச்சனை இல்லை.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய வேலையை சரியாக செய்து முடித்து விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும். வீட்டில் சந்தோஷம் நிறைந்திருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் வரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நீண்டநாள் ஆசை நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும். எதிர்பாராத நண்பரின் சந்திப்பின் மூலம் சந்தோஷம் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பலான நாளாகத்தான் இருக்க போகின்றது. நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று எல்லா வேலையையும் தள்ளிப்போட தோன்றும். ஆனால் பிரச்சினை வரக்கூடாது என்றால் கஷ்டப்பட்டு இன்றைக்கான வேலையில் இன்றைக்கே முடித்துக் கொள்ளுங்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சங்கடங்கள் நிறைந்த நாளாகத்தான் இருக்க போகின்றது. எதிர்பாராத மன கஷ்டம் மன குழப்பம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மனதை அமைதியாக வைத்துக்கொள்ள அந்த ஈசனை நினைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கப் போகின்றது. சந்தோஷம் எந்த ரூபத்தில் வேண்டுமென்றாலும் வரும். வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக அமைய போகின்றது. நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியடையும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. பயணத்தின்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புதிய அனுபவங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய நட்பு, புதிய தொழில், புதிய வாழ்க்கை, என்று ஏதோ ஒரு விஷயம் உங்களுக்கு புதியதாக நடக்க போகின்றது. அந்த புதிய மனிதர்களின் அறிமுகம் நன்மை கொடுக்கக் கூடியதாக தான் அமையும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கப் போகின்றது. நீண்டநாட்கள் கவலை நீங்கும். உறவுகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவழிப்பார்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அற்புதமான பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாக இருக்கப்போகின்றது. வேலை செய்யுமிடத்தில் பாராட்டுகள் குவியும். பயணங்கள் பல நன்மைகளை உண்டாக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் வரும். வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நல்லபடியாக நகர்த்தி செல்லலாம்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் வருத்தமான நாளாகத்தான் இருக்க போகின்றது. நீங்கள் யாரிடம் பேசினாலும் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அனாவசியமாக பேசாதீங்க. கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உங்க வேலையை நீங்க பாருங்க.

- Advertisement -