இன்றைய ராசிபலன் – 24 ஜூன் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்கு இன்றைய தினம் வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பெரியவர்களின் ஆதரவால் காரிய வெற்றிகள் உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக முடியும். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். பொருள் வரவில் தாமதங்கள் இருக்கும். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் சகோதர உறவுகளால் நன்மைகள் ஏற்படும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பால் நன்மைகள் உண்டாகும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் நண்பர்களால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். புதிய மனிதர்களின் நட்பால் ஆதாயங்கள் இருக்கும். சிலர் திடீர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள். பெண்கள் வழியில் தனலாபம் இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் பணியிடத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழில், வியாபாரங்களில் புதியவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் தொடர்பான விவகாரங்களில் பிறரை நம்ப வேண்டாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் இதிலும் நிதானம் அவசியம். சிலருக்கு எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்க தாமதம் ஏற்படும். சராசரியான பொருள் வரவு இருக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாராள பொருள் வரவு இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்குவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவு இருக்கும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். தொழில், வியாபார அபிவிருத்தி உண்டாகும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் சமூகமாக தீரும். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம்.. உடல் நலத்தில் அக்கறை தேவை. இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும். புதிய காரியம் முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. பணவரவில் இழுபறிநிலை இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் அவர்களின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவார்கள். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

மீனம்:
மீன ராசியினர் இன்றைய தினம் விரும்பியதை கிடைக்கப் பெறுவார்கள். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். பழைய கடன் தொகைகளை அடைத்து முடிப்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள்.

- Advertisement -