இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2022

today rasipalan nov 24 2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாமர்த்தியமாக எதையும் பேசி சாதிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் வீண் விரயமாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உறவினர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இந்த நாள் நினைத்த ஒருவரை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் பிள்ளைகளின் பேச்சில் அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகனத்தை சீர் செய்யக்கூடிய விரயங்கள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தைரியமான முடிவுகள் எடுக்க வாய்ப்பு உண்டு.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகம் மற்றும் அமைப்பு இருந்தால் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற கோபங்கள் வரலாம் கட்டுப்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில இழப்புகள் வரலாம் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி முடிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் தாய் வழி உறவினர்கள் மூலம் அலைச்சல் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளிவட்டார நட்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கலை நயமிக்க பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டு. குடும்பத்தில் உங்களுடைய உணர்வுகளை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபகரமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத உதவிகளை பெறுவீர்கள்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நுண்ணிய விஷயங்களை கூட அலசி ஆராய கூடிய நாளாக இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பழைய பிரச்சினைகளை மாறுபட்ட முறையில் அணுகுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மனசாட்சியின் படி நடந்து கொள்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பண விஷயத்தில் கரராக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் சில மனக்கசப்புகள் வரக்கூடும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நல்ல நாளாக அமைய இருக்கிறது. ஆன்மீக நாட்டம் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பேச்சில் நாணயம் வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் சில விஷயங்களில் பொறுமையுடன் கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய திறமையை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிட்டும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கனிவான உங்களுடைய அணுகுமுறையால் சாதனைகளை செய்ய இருக்கிறீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே அன்னோன்யம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சில சூட்சுமங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடினமான பணிகளும் விரைவாக முடிவடையும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களின் மதிப்பு உங்களுக்கு புரிய வரும் நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரியத்தில் இருந்து வந்த நிலை மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தைரியமான முடிவுகள் எடுக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எவரையும் குறை கூறாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் இருந்து சாதகமான பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பேச்சில் இங்கீதம் தேவை. கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற போராட வேண்டி இருக்கும்.

- Advertisement -