இன்றைய ராசிபலன் – 24 டிசம்பர் 2023

Rasi-palan24
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று விட்டுக் கொடுத்து நடக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். உறவுகளுக்குள் நண்பர்களுக்குள் சில விஷயத்தை விட்டுக் கொடுத்து சந்தோஷம் அடைவீர்கள். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். பயணங்களின் போது கூடுதல் கவனம் இருக்க வேண்டும். கொண்டு போகும் பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாத நபர்களிடம் நட்புறவு வைத்துக் கொள்ள வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நம்பிக்கை இல்லாத சூழ்நிலை அமையும். அடுத்தவர்களை சந்தேகக் கண்ணோடு தான் பார்ப்பீர்கள். அதனால் இன்று உங்களுடைய நிம்மதி நிலை குலைந்து போகும். பெற்றவர்களை, கட்டிய மனைவியை, பெற்ற பிள்ளைகளை முழுசாக நம்பும் சமயத்தில் இருக்கக்கூடிய நிம்மதி, சந்தேகப்படும்போது வராது என்பதை நீங்கள் மனதில் ஆழ பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இன்று பொறுமை காக்க வேண்டிய நாள் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அற்புதமான வாய்ப்புகள் வீடு தேடி வரும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது உங்கள் கையில் தான் இருக்கின்றது. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் மகிழ்ச்சி தான். வாய்ப்புகளை நழுவி விட்டவர்கள், நிச்சயம் வருத்தப்படுவீங்க. காதல் கைகூடும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையை கரம் பிடிக்கக்கூடிய நாள் கூடிய சீக்கிரத்தில் வரும். அதற்கான பேச்சுகள் இன்று தொடங்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். ஆசை பட்டதை எல்லாம் அடைந்து விடுவீர்கள். மனம் மகிழ்ச்சி அடையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நல்ல சாப்பாடு நல்ல உறக்கம் இருக்கும். வாழ்க்கை துணை, பிள்ளைகளுடன் உங்களுடைய நேரத்தை செலவு செய்வீர்கள். நீண்ட தூரப்பயணம் நன்மையை கொடுக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். இதுநாள் வரை இருந்த மனக்கசப்பு மறந்து போகும். நிம்மதியான சூழ்நிலையில் இன்றைய நாளை கடந்து செல்ல போகிறீர்கள். மனைவியின் ஆதரவு கிடைக்கும். பேரப்பிள்ளைகளோடு தாத்தா பாட்டிகள் சந்தோஷமாக இருக்கக்கூடிய நாள்தான் இந்த நாள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சில குழப்பங்கள் இருக்கும். அடுத்தவர்களை பார்த்து பொறாமைப்படக்கூடிய தருணங்கள் வரும். ஆனால் உங்களுக்கே இது தவறு என்று தெரியும். இருந்தாலும் தப்பு தப்பா யோசிப்பீங்க. மனதை அமைதி படுத்த ஒருநிலைப்படுத்த ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லலாம். தலைகணத்தையும், கர்வத்தையும், பொறாமை குணத்தையும் குறைத்துக் கொண்டால் இன்றைய நாள் உங்களுக்கு நல்லது.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப சிக்கலான நாளாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. நல்லவர்கள் கெட்டவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியாமல் கொஞ்சம் குழம்புவீர்கள். சில இனம் புரியாத கேள்விகள் மனதில் எழும். அதற்கான பதில்களும் கிடைக்காது. கவலைப்படாதீங்க, கடவுள் உங்களுக்கு நல்லது செய்வார். உங்களுடைய அன்றாட வேலைகளை கவனத்தோடு செய்யுங்கள். குழப்பம் வரும் சமயத்தில் பெரியவர்கள் அனுபவசாலிகளின் ஆலோசனையை கேட்டு நடக்கவும்.

விருச்சிகம்


விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமையாகவே இருந்தாலும், வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். சில பேருக்கு வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். திறமை வெளிப்படும். 10 பேருக்கு நடுவில் நீங்கள் மட்டும் தனியாக தெரிவீர்கள். அந்த அளவுக்கு உங்களுடைய வேலைபாடுகள் அமையும். கமிஷன் தொழில் லாபத்தை கொடுக்கும். சொத்து சுகம் வாங்குவதற்கு உண்டான வாய்ப்புகள் இருக்கு.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பயங்கரமா ஆர்வக்கோளாறு இருக்கப் போகிறது. அடுத்தவர்களை கேள்வி கேட்டு சாகடிக்க போறீங்க. உங்களைப் பார்த்தாலே உங்கள் நண்பர்கள் உறவினர்கள் மனைவி கூட பயந்து ஓடுவார். அந்த அளவிற்கு உங்களுடைய பேச்சு இன்று தாறுமாறாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அளவோடு சாப்பிட்டால் நல்லது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். மன மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் வரும். தொழிலை விரிவு படுத்த வங்கிக் கடன் முயற்சி செய்யலாம். முன்பின் தெரியாதவர்களை நம்பி உங்கள் குடும்ப விஷயத்தை சொல்லாதீங்க. வருமானத்தை அனாவசியமாக மூன்றாவது நபரிடம் வெளிப்படையாக சொல்ல வேண்டாம். கண் திருஷ்டி விழ வாய்ப்புகள் உண்டு.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்கும். வாரம் முழுவதும் வேலை செய்து ஓய்வு இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு இன்று நல்ல தூக்கம் இருக்கும். நல்ல உணவு இருக்கும். கொஞ்ச நேரம் குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்கங்கள். அவர்களும் சந்தோஷப்படுவார்கள். வியாபாரத்தில் சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் வரும் பணப்புழக்கம் சீராக இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் குடும்பத்தோடு சில பேர் வெளியில் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. வெளிப்பயணம் உங்களுக்கு நன்மையை தரும். கொஞ்சம் செலவு இருக்கும். அதை தவிர்க்க முடியாது. பயணத்தின் போது கவனமாக இருக்கவும். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியவும். பிள்ளைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -