இன்றைய ராசி பலன் -25-02-2018

12-rasi

மேஷம்:
mesham
தன்னபிக்கையுடன் காணப்படுவீர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். மாலையில் உறவினர்கள் வீட்டிற்கு செல்விர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். விடுமுறை என்பதால் பயணம் மேற்கொள்வீர்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளுடன் வெளியில் செல்விர்கள். இன்று சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மிதுனம்:
Midhunam
அனுகூலமான நாள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்படக்கூடும். சகோதரர்களால் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். மாலையில் பிள்ளைகளுடன் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்விர்கள். வாகனத்தில் செல்பவர்கள் கவனமாக இருங்கள். வியாபாரம் இன்று விறுவிறுப்பாக இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம் :
சிலர் குடும்பத்தாருடன் உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு செல்விர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தாய்வழி உறவுகளால் நல்ல செய்தி வரும். பெற்றோர்களின் ஆலோசனை தேவைப்படும். எதிர்பார்த்தது வந்து சேர தாமதமாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:
simam

பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். அதனால் உடல்நலக்குறைவு ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில், எதிர்பார்த்தை விட கூடுதல் லாபம் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

கன்னி:

உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். வெளியில் உண்பதை தவிர்த்து கொள்ளுங்கள். தாய்வழி சொந்தங்கள் மூலம் நன்மை உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

இதையும் படிக்கலாமே:
மாசி மாத ராசி பலன்

துலாம்:

குடும்பத்தாருடன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள் .

விருச்சிகம்:

மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பணம் கையில் இருப்பதால் வீண்செலவுகள் செய்ய வேண்டாம். மாலையில் புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளுடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு செல்வீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்த்து கொள்ளுங்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

தனுசு:

புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திடீர்பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள். வீண்செலவுகள் உண்டாகும். அலுவலக பணிகளை வீட்டில் இருந்தபடியே கவனிப்பீர்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் ஏற்படக்கூடும்.

மகரம்:
magaram

பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளுடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு செல்விர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

கும்பம்:

அனுகூலமான நாள். தந்தையின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். செலவுகளை குறைத்து கொள்ளுங்கள், இல்லையென்றால் கடன் வாங்க நேரிடும். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்.

மீனம்:

சிலர் அலுவலக பணிகள் காரணமாக வெளியூர் பயணம் செய்ய நேரிடலாம். பிள்ளைகளின் சந்தோஷத்திற்க்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செய்வீர்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சகோதரர்களை அனுசரித்து செல்லுங்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.