இன்றைய ராசிபலன் – 25 மார்ச் 2024

Rasi-palan-new25
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுடைய பேச்சுக்கு மயங்கமாட்டீர்கள். யார் என்ன சொன்னாலும், உங்களுடைய மனசுக்கு எது சரி என்று படுகிறதோ அந்த முடிவை எடுக்கக் கூடிய வல்லமை உங்களிடத்தில் இருக்கும். தொலைநோக்கு பார்வையோடு சிந்திப்பீர்கள். எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு ஏற்ப இன்று தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த சிந்தனை நிச்சயம் உங்களை பிரச்சனைகள் இருந்து காப்பாற்றும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். மனநிறைவோடு உங்களுடைய வேலையை செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய மனிதர்களின் சந்திப்பு முன்னேற்றத்தை கொடுக்கும். புதிய முதலீடுகள் அதிக லாபத்தை ஈட்டி தரும். வங்கி கடன் முயற்சி செய்யலாம். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி சந்தோஷம் அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனது ரொம்பவும் உற்சாகத்தோடு இருக்க போகின்றது. பழைய நினைவுகள் உங்களை சந்தோஷப்படுத்தும். நீண்ட நாள் பிரிந்த நண்பர்களை சந்திப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். கவனமாக இருக்கவும். கண்மூடித்தனமாக மூன்றாவது மனிதரை நம்ப வேண்டாம். பொருளாதாரத்தில் கொஞ்சம் பின்னடைவான நிலையே உங்களுக்கு இருக்கும். அதை சரி செய்ய சில பேர் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று மனநிறைவோடு எல்லா வேலையையும் செய்வீங்க. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மாமியார் மருமகள் உறவுக்குள் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் சரியாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கமிஷன் தொழில் லாபத்தை கொடுக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப முன்கோபம் வரப்போகின்றது. யாராவது உங்களை சீண்டி விட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களுடைய வேலையை சரியாக செய்ய விட மாட்டார்கள். இதனால் டென்ஷன் பிபி அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. நிறைய தண்ணீர் குடிங்க. உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். சிறுநீர் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வரலாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுப செலவுகள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. கையில் இருக்கும் பணம் கரையும். மனசு கொஞ்சம் கஷ்டப்படும். அவ்வளவுதான், என்ன செய்வது தேவைக்கேற்ப பணத்தை செலவு செய்து தானே ஆக வேண்டும். கவலைப்படாதீங்க வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன் வேலை செய்பவர்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு கொஞ்சம் இருக்கும். எந்த வேலையிலும் முழுசாக கவனம் செலுத்த முடியாது. சுறுசுறுப்பாக இருக்க முடியாது. இதனால் மேல் அதிகாரிகளுடன் திட்டு வாங்க வாய்ப்புகள் உள்ளது. தவறு உங்கள் மீது இருந்தால் நீங்கள் தான் பணிந்து செல்ல வேண்டும். இல்லை என்றால் பிரச்சனை ஆகிவிடும். வழக்கத்தை விட இன்றைய வேலையை கொஞ்சம் சீக்கிரமாக தொடங்குங்கள். பிரச்சனை இருக்காது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் இரண்டு பேர் செய்ய வேண்டிய வேலையை நீங்களே செய்து முடிப்பீர்கள். பாராட்டுகள் கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கப் போகின்றது. எல்லா வேலையையும் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கி வைப்பீர்கள். ஆனால் நாளைக்கான வேலை இரட்டிப்பாகிரும் பார்த்துக்கோங்க. சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய இன்றைக்கான வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கவனக் குறைவு பிரச்சனையை கொடுத்து விடும் ஜாக்கிரதையா இருங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். முருகன் கோவிலுக்கு சென்று முருகனின் அருள் ஆசியை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் விளக்கும். புதிய வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று பொறுப்புகளை உணர்ந்து வேலை செய்வீர்கள். உங்களுடைய வேலையில் அதிக கஷ்டம் இருந்தாலும், அதை பொறுத்துக் கொள்வீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க கூடிய நாள் இது. தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகளை சரி செய்ய போராட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உங்களுடைய பார்ட்னர் உங்க பேச்சைக் கேட்க மாட்டாங்க. வாக்குவாதம் வரும். சில இடங்களில் பார்ட்னர்ஷிப் உடைந்து போகவும் வாய்ப்பு உள்ளது பார்த்துக்கோங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். எல்லாத்தையும் சாதித்து விடலாம் என்று குருட்டு நம்பிக்கையோடு எந்த வேலையும் செய்யக்கூடாது. உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து நடந்துக்க வேண்டும். அடுத்தவர்களுடைய உணவுகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். செலவை குறைக்க வேண்டும்.

- Advertisement -