இன்றைய ராசிபலன் – 25 மே 2023

- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் நன்மைகள் எல்லாம் நடக்கப் போகிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் சக ஊழியர்கள் அனுசரித்து செல்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கட்டுக்கடங்காத கோபம் வெளிப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அனாவசியமான இடங்களில் பேச்சு வார்த்தைகளில் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கூடுதல் உழைப்பால் அசதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன் கோபம் குறைப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது தன்னம்பிக்கை மலரக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும். குடும்ப அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தீராத பகை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மன சங்கடங்கள் தோன்றி மறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சினம் மற்றவர்களை காயப்படுத்துவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் ஆசைப்பட்டு எதிலும் அகல கால் வைத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். பல இடங்களில் இருந்து நல்ல செய்திகளை கேட்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் தொலை தூர இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சோர்வு தட்டும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துடிப்பான சில விஷயங்கள் மற்றவர்களை எளிதாக கவர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்புகள் மலரும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. மனதிற்கு பிடித்தவர்களிடம் அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களின் பொழுது அலைச்சல் ஏற்படும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடப்பதற்கான நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் பேச்சுக்கு முன்னுரிமை கொடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுபயோக முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் ஏற்படும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. சாதகமற்ற அமைப்பு என்பதால் நிதானம் கடைபிடிப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியம் கவனம் வேண்டும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. நினைத்ததை நினைத்தபடி சாதித்து காட்டுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சவாலான சில விஷயங்களை எதிர்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

- Advertisement -