இன்றைய ராசிபலன் – 25 மே 2024

may 25 2024
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நேர்மறை சிந்தனை உடன் செயலாற்ற வேண்டிய தினமாக திகழப் போகிறது. சிக்கனமாக செயல்பட வேண்டும். சுப காரிய முயற்சியில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழ்நிலை அமையும். விருப்பங்கள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பொறுமையை கையாள வேண்டிய தினமாக திகழப்போகிறது. தாழ்வு மனப்பான்மை இல்லாமல் செயல்பட வேண்டும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் ஏற்படும். விவேகத்தை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படக்கூடும். வியாபார ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. அலுவலகத்தில் எதிர்பாராத மாற்றம் ஏற்படக்கூடும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நிறைவான தினமாக திகழப்போகிறது. பயணங்களால் நன்மைகள் உண்டாகும். பிரச்சினைகள் குறையும். புதிதாக இடம், வீடு வாங்கும் எண்ணம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். அலுவலகத்தில் உயர்வு உண்டாக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அமைதியாக செயலாற்ற வேண்டிய தினமாக திகழப்போகிறது. நீண்ட நாட்களாக திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிரிகள் தொல்லை விலகும். கடன் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். மகிழ்ச்சிகரமான செய்தி வந்து சேரும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நல்ல செய்தி கிடைக்கும் தினமாக திகழப்போகிறது. குடும்பத்தில் உள்ள சங்கடம் தீரும். பொருளாதார நெருக்கடி விலகும். ஆசைகள் நிறைவேறும். உறவினர்களின் உதவியால் தாமதமான பணிகள் விரைவில் நடந்தேறும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் எண்ணங்கள் நிறைவேறும் தினமாக திகழப்போகிறது. பிரபலமான நபர்களின் சந்திப்பு ஏற்படும். உறவினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தடைப்பட்டிருந்த வேலைகள் நடைபெறும். கடன்களை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அனுகூலம் நிறைந்த தினமாக திகழப்போகிறது. மனக்கவலைகள் நீங்கும். வீட்டில் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களால் நன்மைகள் உண்டாகும். தம்பதிகள் ஒற்றுமையுடன் செயல்படுவீர்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் உதவிகள் கிடைக்கும் தினமாக திகழப்போகிறது. உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். நம்பிக்கையானவர்களை பற்றி அறிந்து கொள்வீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மாற்றங்கள் நிறைந்த தினமாக திகழப் போகிறது. புதிய சிந்தனைகள் மனதில் ஏற்படும். எதிர்பார்த்த காரியங்கள் இழுபறியாக முடியும். அதை சரி செய்ய அணுகு முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். நல்ல நண்பர்கள் யார் என்பதை புரிந்து கொள்வீர்கள். பிறரிடம் வீண் விவாதங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அலைச்சல்கள் நிறைந்த தினமாக திகழப்போகிறது. இடம் சார்ந்த விஷயங்களில் சற்று விவேகத்துடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற குழப்பங்கள் தோன்றி மறையும். அலைச்சல்கள் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபடும் நிலை உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் குறையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் திறமைகளை வெளிப்படுத்தும் தினமாக திகழப்போகிறது. எதையும் சாமர்த்தியத்துடன் சமாளித்து விடுவீர்கள். தொழிலில் இருந்து வந்த போட்டிகள் விலகி வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் உண்டாகும். நம்பிக்கைக்குரியவர்களின் ஆலோசனையுடன் சில பிரச்சனைகளை தீர்க்கும் சூழ்நிலை உண்டாக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பொறுமையை கையாள வேண்டிய தினமாக திகழப் போகிறது. நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. பொறுமையை கையாளுவது நல்லது. வேலை சார்ந்த பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அதேசமயம் அவர்களால் செலவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -