இன்றைய ராசிபலன் – 25 ஜூன் 2022

today rasi palan 25/06/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கும் நல்ல நாளாக இருக்கிறது. புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. சுபகாரியத் தடைகள் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும் இனிய நாளாக இருக்கிறது. திறமைக்கு உரிய அங்கீகாரத்தை பெறுவீர்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஊக்கமுடன் காணப்படுவீர்கள். புதிய பொலிவுடன் இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நேர்மை தேவை. வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற முயற்சிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த இனிய நாளாக இருக்கப் போகிறது.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதியுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்க கூடிய எல்லா வகையும் சாதகமாக உள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு போட்டி பொறாமைகள் வலுவாக கூடும் என்பதால் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லாபம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன்னிறைவு உண்டு. உங்கள் சுய தேவைக்கு மற்றவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு எடுக்கும் முடிவுகளில் சாதக பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பக்தி நிறைந்த நாளாக காணப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். எங்கும் எதிலும் பொறுமை காப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பேச்சில் இனிமை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம் எனவே பராமரிப்பு தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு நட்பு வட்டம் மேலும் விரிவடைய கூடும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக இருக்கப் போகிறது. மனதிற்கு பிடித்தவர்கள் இடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். நண்பர்கள் வட்டத்தில் தகுந்த சமயத்தில் உதவிகள் கிடைக்கும். தொலைதூர போக்குவரத்து மேற்கொள்ள வாய்ப்புகள் அமையும்.

விருச்சிகம்:
விருச்சிக பிறந்தவர்களுக்கு இந்த நாள் பெருமை உண்டாகக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுகம் உண்டாகும். உங்களை எதிர்த்து போட்டியிடும் அவர்களை சுலபமாக வெற்றி கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிலும் உயர்வு உண்டாகக் கூடும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

தனுசு:
தனுசு பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவை விட செலவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் முளைக்கும். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு காரணமாக அசதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஆர்வம் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்வரும் தடங்கல்களை தங்கள் சமயோஜித புத்தியால் எதிர்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றம் குறித்த விஷயங்களை சாதக பலன் உண்டு. பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அமையும். திடீர் அதிர்ஷ்டம் வரும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு விஷயத்திலும் தாமதமான முடிவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே பொறுமை தேவை. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நலம் தரும். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பன்மடங்கு லாபம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குழப்பம் நீடிக்கும் எனவே நிதானம் தேவை.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வெற்றி அடைய கூடிய அனைத்து சுப யோக பலன்களும் உண்டு. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கணவன் மனைவி இடையே நடக்கும் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு துணிவு தேவை. உங்கள் தரப்பு நியாயங்களை தைரியமாக முன் வைக்க வேண்டும். ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -