இன்றைய ராசிபலன் – 25 ஜூன் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் நினைத்தது நிறைவேறும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகங்களில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலர் தொலைதூர ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் சகோதர வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பெரிய மனிதர்களின் நட்பால் ஆதாயம் இருக்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களை தேடி வருவார்கள். நண்பர்களின் ஆதரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் ஒரு விதமான குழப்பம் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் இருக்கும். மதியத்திற்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் செலவுகள் அதிகரிக்கும். எதிலும் நிதானம் அவசியம். சிலருக்கு மருத்துவ ரீதியிலான வீண் விரயங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் பணி சுமை கூடும். ஒரு சிலர் கடன் வாங்கும் சூழலும் ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இழுபறியாக இருந்த கடன் தொகை வந்து சேரும். நெருங்கிய உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். மகான்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

விருச்சிகம்:
விருச்சக ராசியினருக்கு இன்றைய தினம் சிறப்பானதாக இருக்கும். எதிர்காலத்திற்கான திட்டமிடல்களை செய்வீர்கள். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளால் லாபம் ஏற்படும். தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் புதிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயம் இருக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் சுமுகமாக தீரும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் காரியங்களில் கவனம் தேவை. பிறருடன் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் பயணிக்கும் பொழுது எச்சரிக்கை அவசியம். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

கும்பம்:
கும்ப ராசியினர் இன்றைய தினம் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரங்களில் எதிர்பாராத லாபம் ஏற்படும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்தது அனைத்தும் கிடைக்கும். பழைய பாக்கிகளை அடைத்து முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலர் விருந்து, உபகாரங்களில் கலந்து கொள்வீர்கள். ஒரு சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

- Advertisement -