இன்றைய ராசிபலன் – 25 ஜூலை 2022

today rasi palan 25/07/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நல்ல நன்மைகள் நடக்கப் போகிறது. கணவன் மனைவி உறவுக்கு இடையே இருக்கும் உண்மை தன்மையை உணர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அலைசல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் மற்றவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாத வண்ணம் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு இடையே நெருக்கம் ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீங்கள் தடை இல்லாத வெற்றியை காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் நிதானத்துடன் செய்வது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தேவையற்ற முடிவுகளை பற்றி யோசிக்காமல் வருவது வரட்டும் என்று அப்படியே விட்டு விடுவது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு இடையே புரிதல் ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நேரமின்மை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் குறித்த நேரத்தில் எதையும் செய்ய முயற்சி செய்வீர்கள்.

கடகம்
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் இருந்து வந்து பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர சகோதரிகளுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் மேலதிகாரிகளிடம் இணக்கமாக செல்வது நல்லது.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். பல விமர்சனங்களை தாண்டிய வெற்றி நடை போடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து விட்டதாக மனதிருப்தி ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும் என்பதால் டென்ஷனுடன் இருப்பீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவுகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்காத நபர்களின் சந்திப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை உடனுக்குடன் கவனிப்பது நல்லது.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய முடிவுகள் அனுகூல பலன்களை கொடுக்கும். வெளியிட பயணங்கள் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்புகள் மலர வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீங்கள் உங்களுடைய தரப்பு நியாயத்தை தைரியமாக முன் வைப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களுக்காக யோசிக்காமல் உங்களுக்காக யோசிப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஏக்கத்துடன் காணப்படுவீர்கள். புதிய வாய்ப்புகளை தவறவிடாமல் பற்றிக் கொள்வது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களை மதித்து நடப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்றவர்களின் விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் கூடும்.

- Advertisement -