மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று மறப்போம் மன்னிப்போம் என்று, உங்களுடைய வாழ்க்கையை நேர்மறையாக மாற்றிக் கொள்வீர்கள். எதிரிகளை மன்னித்து விடுவீர்கள். நீண்ட நாள் பகையை மறந்து, உறவுகளோடு ஒன்று சேர நல்ல வாய்ப்புகள் வரும். தீரா பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி அடையும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தடைப்பட்ட சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் துவங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வீண்விரய செலவுகள் குறையும். கடன் பாரம் நீங்கும். நல்லது நடக்கும் நாள் இன்று.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் வேலையில் சின்ன பின்னடைவு உண்டாக்கலாம். வியாபாரத்தை பொறுத்த வரை சீரான போக்கு இருக்கும். கொஞ்சம் வீண் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது பார்த்துக்கோங்க.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பயம் பதட்டம் இருக்கும். வீட்டில் வேலை பளு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நிலை சரியில்லாத சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. வீண் விரய செலவுகள் வரலாம். மனதளவில் சோர்வு இருக்கும். கவனமாக செயல்படுங்கள் தன்னம்பிக்கை தைரியத்தை கைவிட வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு வேகத்தை விட இன்று விவேகம் தான் அதிகமாக இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பிங்க. தெளிவாக சிந்திப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வசீகரத் தோற்றத்தாலும், வசீகர பேச்சாலும் அனைவரையும் உங்கள் பக்கம் ஈர்க்கக்கூடிய நல்ல நாளாக இந்த நாள் அமையும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கோபத்தால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். நண்பர்கள் எதிரியாக மாறலாம். கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் வரவும் வாய்ப்புகள் உள்ளது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். நல்லதே நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். தேவையில்லாத பிரச்சினைகள் தானாக உங்களை விட்டு விலகும். பணக்கஷ்டம் சரியாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பிடித்த கோவிலுக்கு குடும்பத்தோடு செல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களோடு நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனநிறைவு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சொன்ன வாக்கை காப்பாற்றி கொடுப்பீர்கள். குடும்ப உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு சரியாகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தவறான புரிதல், சரியாகும். சந்தேகங்கள் விலகும். நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் பிறக்கும். தேவையில்லாத டென்ஷன் குறையும். சொத்து சுகம் வாங்க வாய்ப்பு உள்ளது. தடைப்பட்டு வந்திருந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். தங்கம் வாங்கும் யோகமும் சில பேருக்கு உண்டு. குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உங்களுடைய மன உறுதி வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். கையில் எடுத்த வேலையில் வெற்றி வாகை சூடாமல், ஓய மாட்டீர்கள். வேகத்தை விட விவேகம் தான் இன்று உங்களிடம் அதிகமாக வெளிப்படும்.