இன்றைய ராசிபலன் – 25 நவம்பர் 2022

today rasipalan nov 25 2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு, எனினும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமையை கையாள வேண்டும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் உங்களுடைய விடாத முயற்சிக்கு நல்ல ஒரு பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற சிந்தனைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையிலிருந்து பின்வாங்க வாய்ப்புகள் உண்டு கவனம் வேண்டும். தேவையற்ற பேச்சு வார்த்தைகள் தேவையற்ற பிரச்சினைகளையும் உண்டு பண்ணும். சுயதொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுக்கக்கூடிய இனிமையான நாளாக இருக்கப் போகிறது. தடைபட்டுக் கொண்டிருந்த நீண்ட நாள் இழுப்பறியான காரியங்களும் முடிவுக்கு வரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனைகள் மற்றவர்களுக்கு பலன் அளிக்கக் கூடிய வகையில் அமைய இருக்கிறது. கணவன் மனைவி உறவில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடுமையான முயற்சிகள் வெற்றிவாகை சூட வழிவகுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் போட்டியாளர்களை போராடி வெற்றி பெறுவீர்கள்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நேரத்தை தேவையில்லாமல் வீண் விரயம் செய்வதை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்க்கு லாபம் இருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பயணங்களின் பொழுது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் நல்ல அமைப்பாக இருக்கிறது. பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். புதிய நட்பு வட்டாரம் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்வதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு தெரியாத விஷயங்களில் கருத்துக்களை திணிக்க வேண்டாம். சுய தொழிலில் லாபம் பெருகும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த விரிசல் மேலும் வலுவடையாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்வது முக்கியம். உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதி இருக்கும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுமையை கையாளுவது நல்லது. முன் பின் தெரியாதவர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் கவனமுடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு எனவே கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். எதையும் தட்டி கழிக்காமல் முழு மனதோடு ஏற்றுக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை மட்டம் தட்டாமல் இருங்கள். கணவன் மனைவி உறவு பலப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மன கவலைகள் அகலும். குடும்பத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சுயநலத்துடன் செயல்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.

- Advertisement -