இன்றைய ராசிபலன் – 25 டிசம்பர் 2023

Rasi-palan25
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக மனதில் சேர்த்து வைத்திருந்த ஆசையை இன்று நிறைவேற்றிக் கொள்வீர்கள். இன்றைய வேலை சுறுசுறுப்பாக தொடங்கும். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் என்று அமோக லாபத்தை பெறுவீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று மறந்தும் கூட பொய் சொல்லக்கூடாது. நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்திற்கு புறம்பாக எந்த காரியத்திலும் ஈடுபடாதீங்க. குறிப்பாக டிக்கெட் வாங்காமல் பேருந்தில் பயணம் செல்வது. லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டுவது போன்ற சின்ன சின்ன விஷயத்தில் கூட நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். போலீஸ் கேஸ் ஆகிவிடும் ஜாக்கிரதை.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். கடின உழைப்பால் உங்கள் வாழ்க்கை ஒரு படி இன்று மேலே உயரப் போகின்றது. பாராட்டும் புகழும் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. மனதிற்கு பிடித்த வேலையாக இருந்தாலும் சரி, பிடிக்காத வேலையாக இருந்தாலும் சரி, வருமானத்திற்கு இன்று வரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நல்லது நடக்கும். கணவன் மனைவிக்கிடையே உறவு பலம் பெறும்.

கடகம


கடக ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். பயணம் அலைச்சலை கொடுக்கும். வீட்டு வேலையில் இருக்கும் பெண்களுக்கு உடல் அசதி இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாமியார் மருமகளுக்குள் பிரச்சனை வர வாய்ப்புகள் உள்ளது. உறவுகளை அனுசரித்து செல்லுங்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் முன்கோபத்தை குறைத்து நடந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் தீரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் சுமையை இறக்கி வைத்தது போல மனசு லேசாக மாறும். குடும்ப சிக்கல்கள் சரியாகும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வந்துவிடும். வியாபாரத்தில் இருந்த சிக்கலும் சரியாகும். ஆக மொத்தம் இன்று நீங்கள் சிக்கலை அவிழ்க்க கூடிய நாளாக இருக்கப் போகின்றது. கோர்ட் கேஸ் வழக்குகள் அரசாங்க ரீதியான பிரச்சனைகளை இன்று கையில் எடுக்கலாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். அந்த அளவுக்கு நன்மை தரக்கூடிய நாளாக இருக்கும். சந்தோஷம் நிறைந்த இந்த நாளில் வீட்டில் சுபகாரிய பேச்சுகள் நடைபெறும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். மனது நிம்மதி அடையும். முடிந்தால் குடும்பத்தோடு குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பண பற்றாக்குறை ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். திடீரென்று ஒரு பண நெருக்கடி உங்களை கஷ்டப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க. வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். கவன குறைவோடு எந்த வேலையையும் செய்யக்கூடாது. அதிர்ஷ்டம் இன்று உங்களுக்கு கொஞ்சம் குறைவாக இருக்கு ஜாக்கிரதை.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நெருங்கிய நண்பர்களின் மூலம் ஆதாயம் கிட்டும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையாக அணுகவும். நெகட்டிவ் ஆக சிந்திக்க வேண்டாம். அடுத்தவர்களை சந்தேகப்பட வேண்டாம். பொறாமையும் பட வேண்டாம். நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும். அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைத்தால் பின் விளைவுகள் உங்களுக்கு தான் கொஞ்சம் ஜாக்கிரதை.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரக்கூடிய நாளாக அமையும். நிறைய நல்ல மாற்றங்கள் உங்களுக்கு வரப் போகின்றது. வேலையில் முன்னேற்றம் இடமாற்றம் இவைகளை ஏற்றுக் கொள்ளலாம். வியாபாரத்தில் பெரிய பெரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெரிய முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கு உண்டான பேச்சு வார்த்தைகளை நடத்துவீங்க. வெற்றி காண கூடிய நாள் இந்த நாள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் பணவரவு இருக்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். பணம் வந்தால் கையில் வைக்காதீங்க. வீண் விரைய செலவு வந்து விடும். வங்கியிலோ அல்லது கடனையோ திருப்பிக் கொடுத்து விடுங்கள். ஆடம்பர செலவை குறைக்கவும். குடும்பத்திற்காக சேமிப்பது இன்று உங்களுக்கு நன்மை. ஏதாவது முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் இருந்தால் அதை முயற்சி செய்யுங்கள் என்று நல்லது நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சீக்கிரமே உங்களுடைய வேலை தொடங்கிவிடும். சுறுசுறுப்பாக இந்த நாளை தொடங்கி சுறுசுறுப்பாக நிறைவு செய்யப் போகிறீர்கள். இந்த நாள் இறுதியில் எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. மாலை நேரம் இனிமையாக செல்லும். வியாபாரத்தில் மட்டும் கொஞ்சம் பிரச்சனைகள் வரும். காண்ட்ராக்ட் ஒப்பந்த விஷயங்கள் கொஞ்சம் இழுபறியாக இருக்கும். கவலைப்படாதீங்க பொறுமையாக இருந்தால் அதிலும் நல்லது நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அதிகம் போராடுவீர்கள். நினைத்ததை சாதித்தே ஆக வேண்டும் என்ற வெறி உங்களுக்குள் இருக்கும். இதனால் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இன்று அடம் பிடிக்காதீங்க. வாழ்க்கையை போன போக்கில் விட்டு விடுங்கள். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் கூடாது.

- Advertisement -