இன்றைய ராசி பலன் – 25-07-2021

rasi palan - 25-7-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்காலம் பற்றிய திட்டமிடலுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். வீட்டில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நட்புகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராக இருக்க உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது அவசியமாகும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எங்கும் எதிலும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபார ரீதியான பண விஷயங்கள் சிறப்பாக அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி காணப்படும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுமானவரை வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டை, சச்சரவுகள் தீரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான வரவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவ விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப ஒற்றுமைக்கு குறைவிருக்காது. எதிர்பாராத நபர்களின் வருகையால் உற்சாகம் அளிக்கும் வகையில் இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு தகுந்த சமயத்தில் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நட்பு வளரும். தொழில் மற்றும் வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கி புதிய பாதை திறக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோக ரீதியான விஷயங்களில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் பழைய பாக்கிகள் வசூலாக கூடிய வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அனுபவம் தொடர்பான விஷயங்களில் ஆச்சரியப்படும் வகையிலான சம்பவங்கள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபார நீதியான பழைய தேங்கிய பொருட்கள் விற்பனையாகும். வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பை பெற போராடுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மன மகிழ்ச்சி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணப்புழக்கம் தேவையான அளவிற்கு கிடைக்கப் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்க கவனம் தேவை.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமை தேவைப்படும் நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சூழ்ச்சிகளை முறியடிக்கும் திறமை உண்டாகும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பம் பற்றிய கவலை மேலோங்கி காணப்படும். பிரிந்து சென்ற உறவுகள் சில வந்து சேரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டை சச்சரவுகள் தீர்வுக்கு வரும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் முன் கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது உத்தமம். ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தின் மீதான உங்களுடைய அக்கரை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். தெரியாத சில விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் மேலோங்கி காணப்படும்.

- Advertisement -