இன்றைய ராசிபலன் – 26 ஏப்ரல் 2022

today rasi palan 26/04/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறையும். மகிழ்ச்சி உங்களை திக்குமுக்காட செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் என்பதால் கூடுமானவரை சமயோசிதமாக செயல்படுவது நல்லது.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளுக்கு குடும்பத்தினருடைய ஆதரவு கிடைப்பது இடையூறுகள் ஏற்படலாம். உங்கள் தரப்பு நியாயங்களை ஆணித்தரமாக எடுத்து வைப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். தேவையற்ற பொருட் செலவை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. எடுத்த பின்பு அதை மாற்றிக் கொள்வதில் பிரயோசனமில்லை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூட்டுத் தொழில் துவங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. துறைசார் நிபுணர்களின் ஆலோசனை கேட்டுக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் பதில் கிடைக்கும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேடல் தூங்குவதற்கான தருணமாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த ஒற்றுமை மேலும் வலுவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிடுசிடுவென்று முகத்தை இனிமையாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்வது நல்லது. கணவன் மனைவி இடையே பேச்சுவார்த்தை இனிமை தேவை. முன்கோபம் தவிர்ப்பது உத்தமம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் விடாப்பிடியாக தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பது நல்லது. பலரும் உங்களை குழம்ப செய்து விடுவார்கள் எனவே கவனம் தேவை.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு அனுகூலம் உள்ள அமைப்பு என்பதால் தொட்டதெல்லாம் வெற்றி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கும். தொலைதூர நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உபகரணங்கள் பழுதடைய வாய்ப்புகள் இருப்பதால் வீண் விரயங்கள் ஏற்படலாம். தொழில் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருட் சேர்க்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையில்லாத வீண் அலைச்சல் ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் எதையும் கையாளுவது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதக பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முடிவுகளுக்கு மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புகள் உண்டு. சுய முடிவு சுய லாபத்தை கொடுக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது. குடும்பத்தில் மூன்றாம் நபர்கள் உடைய அறிமுகம் தவிர்த்து விடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு சீராக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முகத்தில் புதிய பொலிவு காணப்படும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த ஊடல் மறையும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வியாபார விருத்தி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட கால வேண்டுதல்கள் நிறைவேறுவதாக வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைப்பட்ட சுப காரியங்களில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு தடை இல்லாத பணவரவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஒருவருக்கு ஜாமீன் கையெழுத்து போடும் முன் கவனம் தேவை. எதிர்பாராத திடீர் நிகழ்வுகள் உங்களை திக்குமுக்காட செய்யலாம். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுமை தேவை. வார்த்தையில் பணிவு இல்லாவிடில் பின்னர் பல இழப்புகளை சந்திக்க நேரலாம்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆசைகள் நிறைவேறுவதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்ததை அடைந்து காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம் என்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்களை செய்ய நேரிடும் என்பதால் உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மன அமைதி இருக்கும்.

- Advertisement -