இன்றைய ராசிபலன் – 26 ஏப்ரல் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்கு இன்றைய தினம் துணிச்சலுடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். புதிய மனிதர்களிடம் எச்சரிக்கை தேவை. திருப்திகரமான தன வரவு இருக்கும். ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஒரு சிலருக்கு சுப விரயங்கள் ஏற்படும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினர் இன்றைய தினம் யாருக்கும் வாக்குறுதிகள் அடிக்க வேண்டாம். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு பிரச்சனைகள் தோன்றும். மனதில் வீண் பயம் தோன்றும். எதிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் இருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் செயல்களில் தடுமாற்றம் இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். மனதில் இருந்த வீண் கவலைகள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆதரவு இருக்கும். சிலர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் அறிவாற்றல் மேம்படும். ஆடம்பர செலவுகள் செய்வீர்கள். புதிய முயற்சிகளை சற்று ஒத்தி போடுவது நல்லது. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். பழைய கடன் பாக்கிகள் வந்து சேரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் உடல்நலப் பிரச்சினைகள் நீங்கும். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். உங்களின் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயம் இருக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் சிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணி செய்வார்கள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். தடைகள் அனைத்தும் விலகும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்கு இன்றைய தினம் எடுக்கின்ற காரியங்களில் சிறிய தடங்கல்கள் ஏற்படும். மதியத்திற்கு பிறகு புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் சராசரியான லாபம் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு சிறிது தாமதத்திற்கு பிறகு கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் பிறருடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடக் கூடாது. அறிமுகம் இல்லாத மனிதர்களுக்கு கடன் கொடுக்கக் கூடாது. உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். வீட்டில் குழந்தைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக முடியும். அரசாங்க ரீதியான உதவிகள் கிடைக்கும். சிலர் புதிய வீடு, வாகனங்கள் வாங்கும் சூழல் ஏற்படும். நண்பர்களால் பொருள் வரவு இருக்கும்.

மகரம்:
மகர ராசியினர் இன்றைய தினம் உங்களின் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் சிறந்த லாபத்தை பெறுவீர்கள். எதிர்பாரா பொருள் வரவு சிலருக்கு உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் மனக்குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பணம் தொடர்பான விடயங்களில் கவனம் தேவை. பணியில் இருப்பவர்களுக்கே பணிச்சுமை அதிகரிக்கும். வாகனங்களில் பயணிக்கும் பொழுது எச்சரிக்கை தேவை.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். உடல்நல குறைவு ஏற்பட்டு நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் மட்டுமே மிஞ்சும். பொருள் வரவு திருப்திகரமாக இருக்காது. அடிக்கடி கோபம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

- Advertisement -