இன்றைய ராசிபலன் – 26 மே 2024

may 26 rasi palan
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் திறமைகளை வெளிப்படுத்தும் தினமாக திகழப் போகிறது. எந்த வேலையிலும் அலட்சியம் காட்டாமல் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். உற்றார் உறவினரின் ஆதரவு கிடைக்கும். அரசு வழியில் சாதகமான சூழ்நிலை நிலவும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி விடுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அனுசரித்து செல்ல வேண்டிய தினமாக திகழப்போகிறது. நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலையை முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மையைத் தரும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது கவனமாக மேற்கொள்ள வேண்டும். கடன் ரீதியாக எந்த முடிவையும் சிந்திக்காமல் எடுக்க வேண்டாம். ஒரு சிலருக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் வாய்ப்பு கிடைக்கும் தினமாக திகழப்போகிறது. புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். சுப காரிய பேச்சுவார்த்தை வெற்றியைத் தரும். நவீன பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். நினைத்த செயலை நினைத்த மாதிரி செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்து வந்த தாமதங்கள் நீங்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அனுகூலம் நிறைந்த தினமாக திகழப்போகிறது. உழைப்பிற்கு ஏற்ற மதிப்பு கிடைக்கும். கவலைகள் மறையும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டிய தினமாக திகழப்போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். எதிர்கால சிந்தனைகள் அதிகரிக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விலக தெளிவான முடிவு கிடைக்கும். வீடு மனை விற்பதில் எடுத்த முயற்சிகள் வெற்றியைத் தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் உதவிகள் கிடைக்கும் தினமாக திகழப்போகிறது. புதிதாக நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய வேலைகள் கிடைக்கும். எதிர்பார்த்த செய்திகள் வீடு வந்து சேரும். ஒரு சிலருக்கு சுப விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வெளிவட்டார தொடர்பால் நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் வெற்றிகரமான தினமாக திகழப்போகிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த வழக்குகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டாக்கும். ஒரு சிலருக்கு மனக்குழப்பம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் செலவுகள் அதிகரிக்கும் தினமாக திகழப்போகிறது. உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்களுக்கு இடையே செல்வாக்கு உயரும். எதிர்காலம் குறித்த தெளிவான சிந்தனை பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்ல வேண்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் ஆதரவு நிறைந்த தினமாக திகழப்போகிறது. ஒரு சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். பிறமொழி பேசும் மக்களால் நன்மைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தடைப்பட்ட செயல்கள் வெற்றிகரமாக நடைபெறும். முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்கும் பொழுது தக்க ஆலோசனையுடன் முடிவெடுக்க வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அனுசரித்து செல்ல வேண்டிய தினமாக திகழப்போகிறது. பணிகளில் தாமதம் ஏற்படும். பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது வேகத்தை தவிர்க்க வேண்டும். தொழில் ரீதியாக விடயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. உடன் பணி புரிபவர்களை அனுசரித்து செல்வது நன்மையை தரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மகிழ்ச்சி நிறைந்த தினமாக திகழப்போகிறது. உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தேவைகள் நிறைவேறும். வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பால் நன்மைகள் உண்டாகும். தொழில் நுணுக்கங்களை புரிந்து கொண்டு செயலாற்றுவீர்கள். முயற்சிகள் வெற்றியைத் தரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தடைகள் விலகும் தினமாக திகழப்போகிறது. எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். நிலுவையில் இருந்து வந்த பணிகள் நிறைவடையும். திடீர் பயணங்களால் அனுபவம் உண்டாக்கும். புதிய அனுபவம் ஏற்படும்.

- Advertisement -