இன்றைய ராசிபலன் – 26 ஜூன் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினர் இன்றைய தினம் தொழில், வியாபாரத்தை உறுதிப்படுத்துவீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள். தாராளமான பொருள் வரவு இருக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் தாய் வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். சொத்துப் பிரச்சனைகளில் இருந்து சிக்கல்கள் தீரும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சமூகமாக தீரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் திறமையால் பாராட்டுகளை பெறுவார்கள். சிலர் திடீர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் வரவேண்டிய தொகை வந்து சேரும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக முடியும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கோர்ட் விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் குழப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டியை சந்திக்க நேரிடும். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். வீண் விரயங்களால் சிலர் கடன் வாங்க நேரிடும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அரசாங்க ரீதியான காரியங்களில் இழுபறி நிலை ஏற்படும். சராசரியான பொருள் வரவு இருக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் அமைப்பு பெறுவார்கள். திருமண வயதுள்ள பெண்களுக்கு நல்ல வரன் அமையும். தொழில் வியாபாரங்களை விரிவு படுத்தி வெற்றி காண்பீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதார நெருக்கடிகள் விலகும். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் லாபம் இருக்கும். வீட்டிற்கு தேவையானவற்றை வாங்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். திட்டமிட்டு காரியங்களை செயல்படுத்துவீர்கள். பெண்களால் தன வரவு இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பழைய கடன்களை வட்டியுடன் அடைத்து முடிப்பீர்கள்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியிடங்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் கவனத்துடன் செயல்பட வேண்டும். பிறருக்கு கடன் கொடுக்கக் கூடாது. தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வாகனங்களை வேகமாக இயக்குவதை தவிர்க்க வேண்டும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் பிரிந்து சென்ற உணவுகள் உங்களைத் தேடி வருவார்கள். பணவரவால் பொருளாதார நெருக்கடிகள் தீரும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். உடல், மனம் உற்சாகமாக இருக்கும்.புதிய முயற்சிகளை ஒத்தி போடுவது நல்லது.

- Advertisement -