இன்றைய ராசிபலன் – 26 ஜூலை 2022

today rasi palan 26/07/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்துணருடன் செயல்பட கூடிய நாளாக இருக்கிறது. மனதில் புது உற்சாகம் பிறக்கும். சுய தொழிலில் லாபத்திற்கு குறைவிருக்காது. கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் ஏற்படலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் தேவையான பணம் கிடைக்கும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைந்து காட்டுவீர்கள். விடா முயற்சி வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சுப காரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்கள் வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மிடுக்காக செயல்படுவீர்கள். மனதில் இருந்து வந்த உளைச்சல் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புது முயற்சிகள் நல்ல பலன் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேண்டிய வேண்டுதல் நிறைவேறும். பெண்களுக்கு இறை வழிபாடு மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்தது கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமையில் குறை இருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் தொந்தரவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் தன்னம்பிக்கையுடன் செய்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமை மேலும் மெருகேறும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முக்கிய விஷயங்களில் ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். உங்களுடைய ஒத்துழைப்பு மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொலைதூரப் பிரயாணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நற்செய்திகள் கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பேச்சு வார்த்தைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகும் இனிய நாளாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பே உயர்வு தரும். ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பால் உயரக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் அனுகூல பலன்கள் உண்டாகும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பக்தி பெருக்கெடுக்கும் இனிய நாளாக இருக்கிறது. தொலைதூர இடங்களில் இருந்து எதிர்பாராத செய்திகளை பெறுவீர்கள். வேலை தேடி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அலட்சியம் ஆபத்தை கொடுக்கும் எனவே விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகள் வெற்றியாகும் இனிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே புதிய புரிதல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுக்கள் குவிய கூடிய நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். எதையும் அவசரப்படாமல் முடிவெடுப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே குழப்பங்கள் நீடிக்கும் இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நம்பிக்கையில் விரிசல் விழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும் இனிய நாளாக இருக்கிறது. விட்டுச் சென்றவர்கள் மீண்டும் உங்களை நினைக்க வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -