இன்றைய ராசி பலன் – 23-10-2019

Rasi Palan

மேஷம்:

mesham

இன்று காரிய தடை தாமதம் ஏற்படலாம்.உங்கள் செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வருமானம் சராசரி அளவில் இருக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

ரிஷபம்:

rishabam

இன்று மனோ தைரியம் கூடும். சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பணவரவு திருப்தியளிக்கும். உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

- Advertisement -

மிதுனம்:

Midhunam

இன்று மன அமைதி குறையலாம்.கடந்த கால உழைப்பிற்கான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறுக்கிட்டாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

கடகம்:

Kadagam

இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும்.பெற்றோர் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறு அளவில் போட்டி இருக்கும். லாபம் சுமாராக இருக்கும். திட்டமிட்ட விஷயத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

சிம்மம்:

simam

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும்.அடுத்தவர் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்பத்தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழிலில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

கன்னி:

இன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற வளர்ச்சி நிலையை கண்டு பிறர் வியப்படைவர். தாராள பணவரவு கிடைக்கும்.இயன்ற அளவில் தானதர்மம் செய்வீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

துலாம்:

இன்று குடும்ப கஷ்டம், கடன் தொல்லை நீங்கும்.திட்டமிட்ட செயல்கள் விரைவில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

விருச்சிகம்:

இன்று மனதில் ஏதாவது கவலை தோன்றும், உறவினர்கள் உதவி கேட்டு தொல்லைப்படுத்துவர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும்.வருமானம் சீராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு:

இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும்.மதிநுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரம் செழித்து சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்:

magaram

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.செய்த நற்செயலுக்கான நன்மை தேடி வரும். தொழில், வியாபாரம் செழிக்க அதிகம் பணிபுரிவீர்கள். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் இருந்த கருத்துவேறுபாடு மறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்:

இன்று மனக்கவலை உண்டாகும்.தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். ஆரோக்கியம் பலம் பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்:

இன்று பிரச்சனைகள் தீரும்.எவருக்கும் தேவையற்ற வாக்குறுதி தர வேண்டாம். செயல்களில் நிதானத்தை பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9