இன்றைய ராசிபலன் – 26 நவம்பர் 2023

Rasi-palan-new26
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தை தேடி போகும். இன்று விடுமுறை நாளாகவே இருந்தாலும் கார்த்திகை தீபம் என்பதால் வீட்டில் சின்ன சின்ன வேலைகள் இருக்கும். அதை பெண்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆண்கள் இதற்கு உதவி செய்தால் பெண்களின் மனது சந்தோஷப்படும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். இன்று உங்களுக்கு மனநிறைவான நாளாக அமையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். மனசு சந்தோஷமாக இருக்கும். குழந்தைகளோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். சொந்த பந்தங்களுக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதம் நடந்தா, பெருசா எடுத்துக்காதீங்க. விட்டுக் கொடுத்து நடப்பது தான் சொந்த பந்தங்களுக்கு அழகு. பெரியவர்கள், சிறியவர்களுக்காக விட்டுக் கொடுங்கள். விளக்கு ஏற்றும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். குழந்தைகளை நெருப்பு பக்கம் விடாமல் பாத்துக்கோங்க.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கனவு நினைவாகும். ரொம்ப நாள் ஆசைப்பட்ட சில நல்ல விஷயங்கள் இன்று நடக்கும். அதற்காக உங்களுடைய வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவும் கொடுப்பார்கள். மனநிறைவோடு சில நல்ல காரியங்களை இன்று நடத்தி முடிப்பீர்கள். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். வீடு முழுவதும் தீப ஒளிக்கு நிகராக சிரிப்பு சத்தமும் கேட்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். ஆனால் சில பேருக்கு வேலை பளு அதிகமாக இருக்கும். முதலீடு செய்வதில் கொஞ்சம் அதிக கவனம் காட்ட வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபரை நம்ப வேண்டாம். மற்றபடி இன்று குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சந்தோஷமாக தீபத்திருநாளை கொண்டாடி மகிழ்வீர்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். வீட்டில் உறவுகளுக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனஸ்தாபம் வரும். ஆனால் கோபப்படாதீங்க. உறவுகள், இன்றோடு முடியப் போவது கிடையாது. பிரச்சனைகளை சரி செய்ய நிதானத்தை கடைபிடிக்கவும். இந்த தீப திருநாளை சந்தோஷமாக கொண்டாட மன அமைதி பெற அண்ணாமலையாரை வழிபாடு செய்யுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலையும் இரட்டிப்பாகும். ஒரு வேலையை ஒரு முறை செய்தால் வெற்றி காண முடியாது. சின்ன சின்ன தோல்விகளை சந்திக்கும் போது மனது உடைந்து போகக்கூடாது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றியை தரும். மற்றபடி பெருசாக எந்த பிரச்சினையும் கிடையாது. சந்தோஷமான இந்த தீபத்திருநாளில் அந்த ஈசனை வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் நினைத்த வேலைகள் எல்லாம் சரியாக நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகளும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சில பேருக்கு வரலாம். அதுவும் இந்த நாள் இறுதியில் சரியாகிவிடும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப சந்தோஷம் இரட்டிப்பாகும்.

விருச்சிகம்

விருச்சக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் அசவுகரியங்களை சந்திக்க வேண்டி இருக்கும். முன்கோபம் வரும். நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடக்காமல் போவதால் மனசு வருத்தப்படுவீங்க. ராத்திரி படுத்தால் நிம்மதியான தூக்கம் இருக்காது. வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் வர போகத்தான் இருக்கும். அதற்காக உடைந்து போகக்கூடாது. இன்று முருகப்பெருமானை வேண்டி வீட்டில் விளக்கு ஏற்றுங்க நிச்சயம் நல்லது நடக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை தடுக்கவும். வாகனங்களில் செல்லக்கூடிய கட்டாயம் இருந்தால் கூடுதல் கவனம் இருக்கவும். சில பேருக்கு செலவை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வீட்டில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரும். கணவன் மனைவி விவாதம் செய்யக்கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கணும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து காசு பணம் வரும். சேமிப்பை உயர்த்துவீர்கள். வாரா கடன் வசூல் ஆகி இருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை சில பேர் வாங்குவீர்கள். காதல் கைகூடும். சுபகாரிய பேச்சுக்கள் வீட்டில் நடக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மணமகிழ்ச்சியான இந்த கார்த்திகை தீபத்திருநாளை சந்தோஷமாக கொண்டாடுவீங்க.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடுகள் இருக்கும். புதிய வேலை தேடும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இருக்கின்ற வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். மேலதிகாரிகளை சமாளிப்பதில் சிரமம் இருக்கும். வேறு வழி கிடையாது. புது வேலை கிடைக்கும் வரை, பழைய வேலையை தக்க வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். அதிக கோபப்படாதீங்க முன்கோபத்தில் முடிவெடுக்காதீங்க.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் தேவையான பாடம் கிடைக்கும். பேச முடியும் என்பதற்காக, எதையாவது போய் பேசி வைக்காதீங்க. நீங்க பேசி பேசி தான் உங்க வாழ்க்கையில் பிரச்சனை வருகிறது. கொஞ்சம் அமைதியாக இருந்தால் எல்லா பிரச்சனையும் தானாக சரியாகிவிடும். விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும். வருமானத்தில் பிரச்சனை இருக்காது. செலவுக்கு ஏற்ப பணம் கைக்கு வந்து சேரும். பொறுமையும் பேசுவதை குறைப்பதினாலும் நீங்கள் முன்னேறலாம்.

- Advertisement -