இன்றைய ராசிபலன் – 27 மார்ச் 2024

Rasi-palan-new27
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் கொஞ்சம் பயம் இருக்கும். ஒரு விஷயத்தை தொடங்குவதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிப்பீங்க. ஆனால் யோசித்த பிறகும் அதை தொடங்குவதற்கு தைரியம் இல்லாமல் அப்படியே முயற்சிகளை கைவிட்டு விடுவீர்கள். உங்களுடைய மடியில் கனம் இல்லாத போது, வழியில் பயம் இருக்க தேவையில்லை. நேர்மையாக இருப்பவர்கள் தேவையில்லாத பிரச்சினைகளுக்காக உங்கள் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். எப்போதும் போல உங்களுடைய வேலையை பார்க்கவும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிக்கான கூடிய நாளாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷனுக்கு முயற்சி செய்யலாம். வீட்டில் உற்றார் உறவினர்களின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கவலைகள் கொஞ்சம் மனதில் இருக்கும். குடும்பத்தை எப்படி சமாளிப்பது. வரக்கூடிய வருமானத்தை வைத்து செலவை எப்படி பிளான் செய்வது என்ற சிந்தனைகள் நிறைய ஓடிக் கொண்டே இருக்கும். குறிப்பாக ஆண்களுக்கு இன்றைய தினம் கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். எதை நினைத்தும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், மட்டும் நல்லது நடந்து விடாது. உங்களுடைய தகுதியை உயர்த்திக் கொள்ளுங்கள் வருமானம் தானாக உயரும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சம்பள உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. வருமானத்தில் பிரச்சனை இருக்கும். செலவை சமாளிக்க முடியாமல் சில பேர் கடன் வாங்குவீங்க. எதிர்பாராத செலவு கழுத்தை நெறிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. கவலைப்படாதீங்க. அடுத்த மாதம் இந்த பிரச்சனை சரியாகிவிடும். குறைந்த வட்டியில் தேவையான அளவு மட்டும் பணத்தை கடன் வாங்கினால் பிரச்சனை இல்லை.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். எல்லா வேலையிலும் முழு கவனத்தோடு செயல்படுவீர்கள். முன்னேற்ற பாதையில் பயணம் செய்வீர்கள். மேலதிகாரிகள் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விளக்கும். புதிய முதலீட்டின் மூலம் லாபத்தை காண்பீர்கள். அது மட்டும் இல்லாமல் புதுப்புது யோசனைகளை தொழிலில் அறிமுகப்படுத்தி முன்னேறுவதற்கான வழியை தேடுவீர்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். அதை சமாளிக்க முடியாமல் குழப்ப நிலையில் இருக்கும்போது உங்களுக்கு ஆதரவாக நிறைய பேர் வருவார்கள். நண்பர்களின் அருமை பெருமைகளையும் உறவுகளின் அருமை பெருமைகளையும் புரிந்து கொள்வீர்கள். எதிரிகளாக நினைத்தவர்கள் கூட உங்களுக்கு நல்லது செய்வாங்க. இன்றைய நாள் இறுதியில் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சுபமானநாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் சுபகாரிய தடை விலகும் சுப செலவுகள் ஏற்படும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய நல்ல ஆரம்பங்களுக்கு இன்று பிள்ளையார் சுழி போடலாம். வேலையில் உங்களோடு எதிர்த்துப் போட்டி போட்டு வந்தவர்கள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் சரியாகிவிடும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஏமாற்றங்கள் இருக்கும். சின்ன சின்ன தோல்விகள் இருக்கும். இதனால் மனம் சோர்ந்து போவீர்கள். நம்மால் எதையுமே செய்ய முடியவில்லை என்று சில பேர் வாழ்க்கையை வெறுத்து பேசுவீர்கள். அப்படியெல்லாம் கிடையாது. எல்லா நாளும் வெற்றி நம்மிடம் இருந்தால் அதற்கான மதிப்பை நாம் இழந்து விடுவோம். வெற்றியோடு சேர்ந்த தோல்விகளும் நமக்கு நிறைய அனுபவ படங்களை சொல்லித் தரும் கவலைப்படாதீங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத பண வரவு இருக்கும். கடன் பிரச்சனையிலிருந்து வெளிவருவீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களோடு இன்று நேரத்தை செலவு செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சௌகரியமான நாளாக இருக்க போகின்றது. நீங்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அப்படியெல்லாம் உங்களுடைய வாழ்க்கை மாறும். அதற்கான முயற்சிகளை இன்று செய்வீர்கள். ராஜாவைப் போல வாழ வேண்டும் என்று நினைத்தால் வாழலாம். ராணியை போல வாழ வேண்டும் என்று நினைத்தால் வாழலாம். ஆனால் இதற்கு எல்லாம் கூடுதல் முயற்சி தேவை சும்மாவே இருந்தா நிச்சயம் எதுவும் நடக்காது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் உழைத்த கஷ்டத்திற்கு இன்று பலன் கிடைக்கும். நீங்க என்னதான் நல்லது செய்தாலும் அடுத்தவர்களிடம் கெட்ட பெயர் தான் எடுப்பீங்க. அதேதான் இன்னைக்கும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதை பற்றி கவலைப்படாதீங்க. குறிக்கோளில் மாற்றம் வேண்டாம். வாழ்க்கை பயணத்தை ஏறு முகத்தில் அப்படியே ஏற்றி விடுங்கள். நிச்சயம் கடவுள் உங்கள் பக்கம் துணை இருப்பான்.

- Advertisement -