இன்றைய ராசிபலன் – 27 ஏப்ரல் 2022

today rasi palan 27/04/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படக் கூடும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யும் செயலில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்களுடைய நேர்மைக்கு உரிய மதிப்பீடு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்களுடைய திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு செயலையும் உறுதியாக செய்வது நல்லது. குழப்பமான மனநிலையில் இருக்கக்கூடிய முடிவுகள் ஆபத்தை கொடுக்கும் என்பதால் உறுதியான முடிவுகளை எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அமைதியுடன் இருப்பது நல்லது. தேவையற்ற வார்த்தைகளை பிரயோகித்தால் இழப்புகள் ஏற்படும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகளில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்றம் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டு.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முக்கிய முடிவுகளை குடும்பத்தின் ஆதரவை பெறுவது நல்லது. கணவன்-மனைவி இடையே புதிய புரிதல் ஏற்படும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த முன்னேற்றம் சீராக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் பெறும் வாய்ப்பு அமையும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான செயல் மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களின் மூலம் அனுகூல பலன் உண்டு என்பதால் உற்சாகத்தில் குறைவிருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லைகள் உருவாகும் என்பதால் கூடுமானவரை எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைவதற்கு நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் பண வரவு திக்குமுக்காட செய்யும். உத்தியோகஸ்தர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் பராமரிப்பு மேற்கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை நடத்திக் காட்டும் வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நீங்கள் செய்த உதவி இன்று கைமாறாக திரும்ப கிடைக்கும். சமூகத்தின் மீது அக்கறை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறை வழிபாடுகளின் மீது அதிக ஆர்வம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திருப்பங்களை காணக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. எந்த ஒரு முக்கிய முடிவையும் தள்ளி வைப்பது நல்லது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வார்த்தையில் இனிமையை கடைபிடிப்பது நல்லது.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சாதகமற்ற அமைப்பு என்பதால் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் தடை, தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. தொலைதூர பிரயாணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு தேவை. ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகத்திற்கு குறைவிருக்காது. முகத்தில் புதிய தேஜஸ் தெரியும். தொலை தூர இடங்களிலிருந்து மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.

- Advertisement -