இன்றைய ராசிபலன் – 27 ஜூலை 2023

jul 27 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் சாந்தமாக கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எதிர்பார்த்து காத்திருந்த ஒரு விஷயம் கைக்கூடி வரும் யோகம் உண்டு. பொருளாதார முன்னேற்றம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். அனாவசிய செலவுகளை சந்திக்க நேரிடும். திடீர் லாபம் திக்கு முக்காட செய்யும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் நிறைந்த நல்ல அமைப்பாக இருக்கிறது. செய்ய நினைத்ததை யோசிக்காமல் செய்து விடுங்கள். வெளியிடங்களில் வீண் வாதங்கள் செய்து கருத்து வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். பொருளாதாரம் ஏற்றம் காண புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கை நிறைந்த நல்ல அமைப்பாக இருக்கிறது. எதையும் சாதிக்க முடியும் என்கிற முனைப்புடன் இருப்பீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே விட்டுக்கொடுத்து செல்லுங்கள். நண்பர்களால் மன உளைச்சல் வரலாம். கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விடுங்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடன்களில் விழுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் அவசரப்பட்டு எடுக்காதீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனம் வேண்டும். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். மனக்கட்டுப்பாடு தேவை.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நயமான பேச்சால் மற்றவர்களை எளிதாக ஈர்த்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஈகோவை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். பணியிடங்களில் உங்கள் கருத்துகளுக்கு மேலதிகாரிகள் முன்னுரிமை கொடுப்பார்கள்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நகைச்சுவை உணர்வு அதிகரித்து காணப்படும் நல்ல நாளாக இருக்கிறது. சுற்றி இருப்பவர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு உணவு கட்டுப்பாடு தேவை.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ணங்கள் நேர்மறையாக இருக்கும். எதையும் பாசிட்டிவாக பார்ப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். நண்பர்களுக்கு இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். புதிய பாதைகளை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஓய்வு தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. ஓயாத உழைப்பை கொடுத்த உங்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்றம் காணும். ஆடம்பர பொருட்செலவுகளை கட்டுப்படுத்துவது உசிதமானது. யாருடைய மனதையும் முன் கோபத்தால் கஷ்டப்படுத்தாதீர்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் அலைபாய வாய்ப்பு உண்டு. தவறான பாதைகளை தேர்ந்தெடுக்காமல் அறிவாற்றலுடன் சிந்திப்பது நல்லது. அனுபவம் இல்லாதவர்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். பெரிய மனிதர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் பொறுப்புணர்வு அதிகரிக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மன கவலைகள் அகன்று புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களுக்கு உங்களுடைய உதவி தேவைப்படலாம். வலிய சென்று வம்புகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள். பயணங்கள் புது அனுபவங்களை கொடுக்கும் வண்ணம் இருக்கிறது. உணர்வு பூர்வமாக முடிவெடுக்காமல் சிந்தித்து எடுப்பது நல்லது.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது நடக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். சுப காரிய முயற்சிகளில் இருந்து வந்த ஆமை வேகம் முன்னேற்றம் காணும். தொழில் சார்ந்த நவீன உபகரணங்களை கையாளுவதில் கவனம் வேண்டும். பயணங்களில் எச்சரிக்கை தேவை.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்பு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. யாரையும் அலட்சியம் செய்யாமல் அவர்களுடைய கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. எதுவும் உங்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் எனவே போராடித்தான் பெற வேண்டி இருக்கும் எளிதாக கிடைக்காது. சிலருக்கு இறை சிந்தனை அதிகரித்து காணப்படும்.

- Advertisement -