இன்றைய ராசி பலன் – 27-08-2020

rasi palan - 27-8-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவி இடையே மனகசப்புகள் நீங்கி பரஸ்பர அன்பு அதிகரிக்கும். வீடு மனை வாங்கும் முயற்சிகள் தடைகளுக்கு பின் வெற்றி பெறும். விநாயகர் வழிபாடு செய்து வாருங்கள் நல்லது நடக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எதிர்பாராத விதமாக பணவரவு கிடைக்கும். திடீர் பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கலை மற்றும் இசைத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு பணிச்சுமை கூடும். பைரவர் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பொருளாதார ரீதியான சிக்கல்களை எளிதில் சமாளித்து விடுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இணக்கமாக செல்வது முன்னேற்றம் தரும். தெய்வ வழிபாடு நன்மைகள் அடைய வழிவகுக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் உங்கள் ராசிக்கு நன்மைகள் நடைபெறக்கூடிய இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும் சுபகாரிய முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யாரையும் எளிதில் நம்பாத குணம் படைத்த உங்கள் ராசிக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். நீண்ட நாள் பிரிந்திருந்த உறவுகளை ஒன்று சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் குதூகலம் நிறைந்திருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு பொருளாதார ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரலாம்.நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் அனுகூலமான பலன்களை அடைவார்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் திறமைக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும். சக்கரத்தாழ்வாரை வழிபடுவது நன்மை உண்டாகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு திருமண சுபகாரிய முயற்சிகளில் விரைவில் கைகூடி வரும்.நல்ல வரன் கிடைக்க பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை ஒரு சிலருக்கு உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடிவுக்கு வரும். சகோதர சகோதரிகளால் தேவையற்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு பேச்சில் நிதானத்தையும், அமைதியையும் கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். பத்திரிக்கை மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகளால் சில தொல்லைகள் வரலாம்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறைந்து காணப்படும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது அமைதியை உண்டாக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஒரு சிலருக்கு உண்டாகும்.அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி தரும். அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி தரும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களை மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும்.வெளியூர் பயணங்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிட்டும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து காணப்படும். பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். பொருளாதார ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க போராட வேண்டியிருக்கும்.தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் ஒரு முறைக்கு இரு முறை ஆலோசனை செய்து முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக அசதி உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.