இன்றைய ராசிபலன் – 27 டிசம்பர் 2023

Rasi-palan27
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மதிப்பும் மரியாதையும் கூடும் நாளாக இருக்கப் போகின்றது. உங்களை அவமானப்படுத்தியவர்கள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவுக்கு உங்களுடைய திறமைகள் வெளிப்படும். எதிரிகள் உங்களிடம் சரண் அடைந்து விடுவார்கள். ஜெய்ப்பதற்காகவே பிறந்தவர்கள் போல இன்று காலரை தூக்கி விட்டு நடக்கலாம். சந்தோஷமாக இந்த நாளை கடந்து செல்லுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பாராத செலவு கழுத்தை நெரிக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் இந்த நாள் இறுதியில் பிரச்சனைகள் சரியாகிவிடும். மற்றபடி ஆரோக்கியம் குடும்பம் வேலை தொழில் எல்லாம் உங்களுக்கு சுமுகமாக செல்லும். பண விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு அதிகமாக இருக்கும். புதுசாக வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்களுக்கு பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். காதல் கைகூடும். திருமண பேச்சு வார்த்தை நடக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு சுப செலவு ஏற்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகப் பணியில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலதிகாரிகளிடம் பணிவோடு நடக்கவும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். இன்றைய வேலையை நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளி போடக்கூடாது. நாளைக்கு செய்யக்கூடிய வேலையை இன்றே செய்து முடிக்கும் அளவுக்கு நீங்கள் கொஞ்சம் முன்னேற்பாடுகளோடு இருந்து கொள்வது நல்லது. கடைசி சமயத்தில் சில வேலைகளை செய்ய முடியாமல் டென்ஷன் ஆக கூடாது அல்லவா. அதற்காகத்தான் டென்ஷனை குறைக்க, சோம்பேறித்தனத்தை தள்ளி வைக்கவும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று வீட்டில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இதுநாள் வரை நீங்கள் பொறுப்பு இல்லாத பிள்ளைகள் என்று பெற்றவர்கள் சொல்லி இருப்பார்கள். இன்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு சிறப்பான காரியங்களை நடத்தி காட்டுவீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படும். நல்ல வேலை கிடைக்கும். சம்பாத்தியம் உயரும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தவும். முன் கோபம் குறைக்கவும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் தலை மேல் இன்று கூடுதல் பொறுப்புகள் வந்து இறங்கும். இல்லத்தரசிகளுக்கு வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். புகுந்த வீட்டில் சில கடமைகளை உங்கள் கையில் ஒப்படைப்பார்கள். அதை பொறுப்போடு செய்து முடியுங்கள். பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசாதீங்க. பெண்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பத்தில் வரக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பிக்க முடியும். வேலை செய்யும் இடத்தில் சில பேருக்கு பதவி உயர்வு கிடைக்கும். இதனால் வேலை பளு, வேலை செய்யக்கூடிய நேரம் அதிகமாகும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இதுநாள் வரை கிடப்பில் போட்டிருந்த வேலைகளை இன்று எடுக்கலாம். அரசாங்க வேலைகளில் முடிக்க முடியாத காரியங்களை இன்று முயற்சி எடுத்தால் நன்மை நடக்கும். போக்குவரத்து தொழிலில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்கவும். வண்டி ஓட்டும் போது ஃபோன் பேசாதீங்க. கூர்மையான ஆயுதங்களை கையாளும் ஆண்கள் பெண்கள் கவனத்தோடு இருக்கவும். சின்ன சின்ன காயம் பட வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று மனசு சோர்வாக இருக்கும். இதனால் உடம்பும் சோர்வாக இருக்கும். எந்த வேலையிலும் முழு கவனத்தோடு ஈடுபட முடியாது. இதனால் பல இடங்களில் திட்டுவாங்க வாய்ப்பு உள்ளது. மனதையும் உடம்பையும் உற்சாகமாக வைத்துக் கொள்ள, பிடித்த இறை நாமத்தை சொல்லலாம். பிடித்த பாடல்களை கேட்கலாம். மனசு சோர்வா இருக்கு, வேலை செய்ய முடியவில்லை என்பவர்கள் விடுமுறை எடுத்து ஓய்வு எடுப்பது நல்லது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். பிள்ளைகளுக்கு பெற்றவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவு ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பேச்சு வார்த்தையை தொடங்குவார்கள். பெரியவர்களின் பேச்சை கேட்டு நடக்கவும். எந்த விஷயத்திலும் நீங்க இன்று அடம் பிடிக்காதீங்க. அடம் பிடிப்பவர்களுக்கு நிம்மதி கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று தொழிலை விரிவுபடுத்துவதற்கு தேவையான முயற்சிகளை எடுப்பீர்கள். சின்னதாக பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் முதல், பெரிய தொழிற்சாலை நடத்துபவர்கள் வரை இன்று வாழ்வில் முன்னேற, அவரவரால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடு செய்வது எப்படி, வியாபாரத்தை அதிகப்படுத்துவது போன்ற விஷயங்களை, இன்று அலசி ஆராய்ந்து பார்த்தால் உங்களுக்கு தேவையான நல்லது நடக்கும். மற்றபடி செய்யும் வேலை வீடு எல்லாம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாக மாறும். நிம்மதியை இழப்பதற்கு காரணமாக இருந்த பிரச்சனைகள் எல்லாம் உங்களை விட்டு ஒவ்வொன்றாக தூர செல்லும். கவலைப்படாதீங்க, பொறுமையாக இருங்கள். அதிக கடன் வாங்க வேண்டாம். செலவை வருமானத்திற்குள் கட்டுப்படுத்த தெரிந்து கொண்டால், உங்களுடைய வாழ்க்கையில் நிம்மதி பிறந்துவிடும். வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் அவர்களுடைய பெயரில் சேமிப்பு தொடங்குங்கள். பணம் இரண்டு மடங்காக சேரும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். நன்மை நடக்கக்கூடிய நாளாக இருந்தாலும், உங்களுடைய பேச்சு உங்களுக்கு சில பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்க வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய வாயை கட்டுப்படுத்த வேண்டும். எப்போது பார்த்தாலும் வாய்சவடால் விட்டுக் கொண்டே இருந்தால், சில இடங்களில் அவமானம் உண்டாக வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள். தேவையில்லாத சமயத்தில் அமைதியாக இருந்துக்கோங்க நல்லது.

- Advertisement -