இன்றைய ராசிபலன் – 28 ஜனவரி 2024

Rasi-palan-new28
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்ததைவிட நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்புகளை நிராகரித்தவர்கள் இன்று தோற்கடிக்கப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகள் உங்களை ரெக்கமென்ட் செய்தால் அதற்கு நான் தகுதி இல்லை என்ற வார்த்தையை மட்டும் சொல்லாதீங்க. ஏற்றுக் கொள்ளுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ரிலாக்ஸ் ஆன நாளாக இருக்கப் போகின்றது. எதுவும் உங்களை தொல்லை கொடுக்காது. பொண்டாட்டி பிள்ளைகள் முதல், அலுவலக வேலை வரை எல்லாமே நீங்கள் சொன்ன பேச்சைக் கேட்கப் போகின்றது. அப்போது உங்களுக்கு இன்று லக்கடிக்க கூடிய நாள் தானே. எந்த டென்ஷனும் இல்லாமல் அமைதியாக இன்றைய நாள் உங்களை கடந்து செல்லும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். அதை சமாளிக்க தேவையான தெம்பு தேவை என்றால் காலையிலேயே வயிறு ரொம்ப சாப்பிட்டு வீட்டில் இருந்து கம்பீரமாக கிளம்புங்கள். எந்த பிரச்சனை வந்தாலும் என்னால் சமாளிக்க முடியும் என்ற மன தைரியத்தோடு இன்றைய நாளை தொடங்குங்கள். நிச்சயம் வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையைக் கண்டு அல்லது சக ஊழியர்களைக் கண்டோ அல்லது எதிராளியைக் கண்டு பயந்தீர்கள். இன்று நீங்கள் பயந்த சுபாவத்துடன் இருந்தால் உங்களை தொலைத்து விடுவார்கள் ஜாக்கிரதை.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் அது நடக்காது. ஏதாவது ஒரு வேலை எதிர்பாராமல் முன்னே வந்து நிற்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் சோர்வு இருக்கும். எதிர்பாராத விருந்தாளிகளின் வருகை வேலையை இரட்டிப்பார்க்கும். இரட்டிப்பு சமையல் இரட்டிப்பு வேலை என்று உங்களுக்கு இன்னைக்கு கொஞ்சம் டென்ஷன் இருக்கும் பார்த்துக்கோங்க.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். குடும்பம் குழந்தை என்று நேரத்தை செலவு செய்வீர்கள். நீண்ட நாட்களாக செய்ய முடிக்காமல் வைத்திருக்கும் காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். வண்டி பழுது பார்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது, வீட்டில் இருக்கும் பழுதான எலக்ட்ரானிக் ஐட்டங்களை சரி செய்வது, போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இதனால் சின்ன சின்ன செலவும் உண்டாகும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த அளவு நன்மைகள் நடக்காவிட்டாலும், உங்களுடைய வேலையில் எந்த பிரச்சனையும் இருக்காது. பேராசை பெரு நஷ்டம் என்று சொல்லுவார்கள். உங்களுக்கு என்ன தேவையோ அதை அளவோடு கடவுள் கொடுப்பார். வாழ்க்கை துணை சொல்லுவதை கேளுங்கள். அரசாங்க வேலையில் இருப்பவர்கள் குறுக்கு வழியில் சிந்திக்கக் கூடாது ஜாக்கிரதை.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன மகிழ்ச்சி, பெருசாக இரட்டிப்பாக மாறப்போகின்றது. நீங்கள் எதிர்பார்த்ததை விட கடவுள் உங்களுக்கு நிறைவான சந்தோஷத்தை கொடுப்பான். ஆனால் இன்று நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டிய விஷயம் முன்கோபத்தை குறைக்க வேண்டும். முன்கோபம் இருந்தால் நடக்க வேண்டிய நல்லதும் நடக்காமல் போய்விடும். வரவங்க நல்ல செய்தியை சொல்லாமலேயே திருப்பி போய்விடுவார்கள். ஆகவே எல்லோரிடமும் பொறுமையாக பேசுங்க. உங்களைப் பார்த்தாலே பயந்து ஓடுற மாதிரி நடந்துக்காதீங்க.

விருச்சகம்


விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று அக்கம் பக்கம் வீட்டாரியிடம் சண்டை வர வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு தெரிஞ்சவங்க நண்பர்கள் இவர்களிடத்தில் எல்லாம் உறவாடும் போது, கொஞ்சம் உஷாராக இருக்கணும். உங்களுடைய குடும்ப விஷயங்கள் அத்தனையும் முழுசாக போய் ஒப்பிவிக்கா வேண்டாம். என் புருஷனுக்கு 50 ஆயிரம் சம்பளம் வாங்குரார், என்று சொன்னால் 5 ஆயிரம் கடன் கொடுங்களேன் என்று கேட்பார்கள். பிறகு இல்லை என்று சொல்ல வேண்டி வரும். சண்டை வரும் இப்படிப்பட்ட பிரச்சனைகளை இன்று நீங்கள் எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது கொஞ்சம் கவனம் தேவை.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை தானே எல்லாம் நல்லா இருக்கும். நல்லா சாப்பிடலாம் என்று பிளான் பண்ணி வச்சிருப்பீங்க. ஆனா பிளானை சொதப்புவதற்கு ஒரு ஜீவன் வரும். அந்த ஜீவன் உங்கள் வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு செல்லும். பிறகு உங்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். இதிலிருந்து சமாளிக்க வேண்டும் என்றால் நீங்கள் தந்திரமாக செயல்பட வேண்டும். உங்களுக்கு ஆகாதவங்கள இன்னைக்கு வீட்டுக்குள்ள விடாதீங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று காலை பொழுது கொஞ்சம் மந்தமாக சென்றாலும். மாலை பொழுது சுறுசுறுப்பாக மாறிவிடும். குடும்பத்தோடு கோவில் குளங்களுக்கு செல்வது அல்லது ஷாப்பிங் போவது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியிடங்களில் சாப்பிடுவது மனைவிக்கு பிடித்த பொருட்கள் வாங்கி கொடுபது போன்ற விஷயங்களை செய்து அசத்த போறீங்க. சுப செலவுகள் ஏற்படும். இன்றைய நாள் இறுதியில் பர்ஸ் காலியாகும் அவ்வளவுதான்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சிரமப்படுவீங்க. எதிர்பாராத செலவு வந்து கழுத்தை நெறித்து விடும். இதனால் வீட்டில் சண்டை வர வாய்ப்பு உள்ளது. ஆனால் என்ன செய்வது. நிதி பற்றாக்குறையின் காரணமாக இப்படி ஒரு சூழ்நிலை. அதற்காக கணவன் மனைவிக்குள் சண்டை போட்டால் சரியாகுமா. ஆகவே நிதானமாக யோசிங்க, பணத்திற்கு என்ன வழியோ அதை தேடுங்க. செலவு குறைக்கப் பாருங்கள். உங்கள் பிரச்சினையில் பாதி தீரும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். நீங்கள் எதிர்பாராத நபரின் மூலம் உங்களுக்கு நல்லது நடக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அட்ஜஸ்ட் செய்து நடக்கவும். இடம் மாற்றம் ஏற்படும். மேனேஜர், மேல் அதிகாரிகள் சொல்லுவதை கொஞ்சம் கவனமாக கேட்கவும். யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பது நன்மை தரும்.

- Advertisement -