இன்றைய ராசிபலன் – 29 ஜனவரி 2024

Rasi-palan-new29
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிராளிகளின் செயல் கொஞ்சம் டென்ஷனை அதிகப்படுத்தும். இதனால் அடுத்தவர்களை பார்த்து நீங்கள் எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. உங்களுடைய திறமை, உங்களுடைய வேலை என்ன என்பதை மட்டும் பாருங்கள். அடுத்தவர்களை பார்த்து சின்னதாக பொறாமைப்பட்டாலும் இன்று உங்களுக்கு நிறைய இழப்புகள் ஏற்படும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால், இன்று தப்பிக்கலாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் சரியாக சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். இதனால் பெயர் பாராட்டு புகழ் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அனாவசியமாக அடுத்தவர்களை புகழ்வது அடுத்தவர்களை இகழ்வது போன்ற விஷயங்களை செய்ய வேண்டாம்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புத்தம் புது ஐடியாக்கள் தோன்றும். வேலையில் புதுசு புதுசா ஏதாவது செஞ்சுகிட்டே இருப்பீங்க. வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய நிறைய விளம்பரங்களை செய்வதற்கான ஐடியாக்கள் உருவாகும். இதனால் இன்று நல்ல முன்னேற்றம் அடையக்கூடிய நாளாக தான் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பெரியவர்களின் ஆசீர்வாதத்தை வாங்கிக் கொள்ளுங்கள். தலைகனம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் எதிர்ப்புகள் இருக்கும். எதிலும் போராடி வெற்றி அடையக்கூடிய சூழ்நிலை இருக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு யாரும் உடனடியாக சரி என்று சொல்ல மாட்டாங்க. இதனாலேயே உங்களுக்கு சின்ன சின்ன சிக்கல்கள் இன்று வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் கவனமாக இருக்கவும். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வருமானம் சீராக இருக்கும். கடன் சுமை குறையும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய அதிசயங்கள் மறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்காத நபரை சந்திப்பதன் மூலம் எதிர்பாராத நல்லது நடக்கும். உங்களுக்கே தெரியாது இப்படி ஒரு நல்ல விஷயம் இருக்குதுன்னு. ஆனா அது உங்களைத் தேடி வர போகிறது. இந்த நாள் இறுதியில் மனநிம்மதியோடு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். இறைவனுக்கு சின்ன நன்றியை தெரிவிங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களுக்கு நல்லது நடக்கும். அந்த நல்லதில் கலந்து கொள்வதே உங்களுக்கு பேரின்பமாக தோன்றும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். முன்பின் தெரியாத நபரை கண்மூடித்தனமாக நம்பாதீங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். நாலு பேர் வேலையை உங்கள் தலையில் கட்டி விடுவார்கள். அதை எப்படி செய்யவது என்று தெரியாமல் விழி பிதுங்கி திணறுவீர்கள். முடியாது என்றால் முடியாது என்ற வார்த்தையை நேரடியாக சொல்லவும். எல்லா சுமையையும் தலையில் வாங்கிக் கொண்டு பிறகு திணறுவதில் எந்த பிரயோஜனமும் கிடையாது. இன்று நீங்கள் கொஞ்சம் ஏமாந்தால் உங்கள் தலையில் மிளகாய் அரைக்கப்படும் ஜாக்கிரதை.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு பெரிய சவாலாக இருந்தாலும் அதை முன்னாடி போய் நின்று நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். இதை நான் செய்து முடிக்கிறேன் என்று சொல்வீர்கள். இதனால் பெயர் புகழ் உண்டாகும். வாழ்க்கையில் வளர்ச்சி அடைவதற்கு இன்றைய நாள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நல்லதே நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். எதிரிகளைப் போட்டி போட்டு ஜெயிக்கவே நேரம் பத்தாது. நீங்கள் என்ன நல்லது செய்தாலும் அதை குறை சொல்ல நாலு பேர் உங்களை சுற்றி இருப்பார்கள். அவர்களை பற்றி கவலைப்படாதீர்கள். உங்களுடைய வேலையையும் உங்களுடைய கவனத்தையும் சிதறடைக்க, அவர்கள் செய்யும் சூழ்ச்சியில் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. மனதை ஒருநிலைப்படுத்தி கவனத்தை சீராக ஒரே விஷயத்தில், உங்களுக்கு நன்மை தரும் விஷயத்தில் மட்டும் செயல்படுத்தவும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். அளவோடு சாப்பிடுங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து வையுங்கள். உடல் பருமனாக இருப்பவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபடவும். மற்றபடி வேலை தொழில் எல்லாம் உங்களுக்கு இன்று சாதகமாக அமையும். வாரா கடன் வசூல் ஆகும். ஆடம்பர பொருள் சேர்க்கை இருக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் பல்லை கடித்துக் கொண்டாவது என்று ஆடம்பர செலவை குறைக்க வேண்டும். மேலும் மேலும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையை தவிர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு எதிர்காலத்தில் பெரிய பிரச்சினையை கொடுக்க வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளிடம் சுதந்திரமாக பேசுவதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வேலையில் இருக்கும் பிரச்சனைகளை வாய் திறந்து வெளிப்படையாக சொல்லுங்கள். அப்போதுதான் விடிவுகாலம் பிறக்கும். தவிர எல்லா பிரச்சனைகளையும் மனசுக்குள்ளேயே வைத்திருந்தால் இன்று குழப்பங்கள் தான் அதிகரிக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட தூரப்பயணம் நன்மையை தரும். சேல்ஸ்மேன் வேலை செய்பவர்களுக்கு டார்கெட்டை முடிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உற்சாகத்தோடு வேலை செய்வீங்க. மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். மனைவியை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். மனைவி சொல்வதே மந்திரம், மனைவி சொல் பேச்சை தட்ட மாட்டேன் என்று முடிவு செய்தால் உங்களுக்கு நல்லது நடக்கும்.

- Advertisement -