இன்றைய ராசிபலன் – 29 மார்ச் 2023

29 march
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்கு இன்றைய தினம் சிறு செலவுகள் ஏற்படும். சொத்து விவகாரங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். நேர்மறையான சிந்தனைகள் ஏற்படும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இன்றைய தினம் வெளியிடத்தில் மரியாதை பெருகும்.
தொழில் வியாபாரங்களில் சுமாரான லாபத்தை பெறுவார்கள். வெளியூர் வெளிநாடுகளில் செல்லும் முயற்ற்சிகளில் தாமதங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்கு இன்றைய தினம் பொருளாதார உயர்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். புதிய நபர்கள் மூலம் சிலருக்கு ஆதாயம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்னோன்யம் கூடும். பணியிடத்தில் சக ஊழியர்களின் பாராட்டை பெறுவீர்கள்.

கடகம்:
கடக ராசிக்கு இன்றைய தினம் சிறப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். பெண்கள் வழியில் சிலருக்கு லாபம் ஏற்படும். பிறருக்கு கடன் கொடுப்பதில் எச்சரிக்கை தேவை. கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும் மனம் உற்சாகமாக இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்கு இன்றைய தினம் தொலைதூரப் பயணங்கள் செல்லும் நிலை ஏற்படும். குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவுகள் மூலம் சிலருக்கு தனலாபம் ஏற்படும். தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் தன வரவுகளில் சுமூகமான நிலை இருக்கும். சக ஊழியர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். பணியிடங்களில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் கணவன் – மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அந்நிய நபர்களின் அறிமுகத்தால் சிலருக்கு ஆதாயம் உண்டாகும். ஒரு சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

விருச்சிகம்:
விருச்சக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் ஒரு சிலருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும். சொத்து தொடர்பான விவகாரங்களில் இழுபறி நிலை நீடிக்கும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் மனக்கவலைகள் தீரும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு புதிய வாகனம், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் நல்லபடியாக முடியும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு சுபுச் செலவுகள் ஏற்படும். கோயில்களில் நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் பொதுமக்களின் ஆதரவு இருக்கும். புதிய முயற்சிகளில் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். ஒரு சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள்.

மீனம்:
மீன ராசி எனக்கு இன்றைய தினம் புதிய அனுபவம் ஏற்படும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் தாராளமாக ஈடுபடலாம். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

- Advertisement -