இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2022

today rasi palan 29/04/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதில் அனுகூல பலன் உண்டு. சுய தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தட்டிச் சென்ற வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இழுபறியில் இருந்து வந்த வேலைகள் கூட முடிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு செல்லும் இடமெல்லாம் மதிப்பும், மரியாதையும் அதிகரித்து காணப்படும். உங்களுடைய நேர்மைக்கு உரிய பரிசு கிடைக்கும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவு பெறுவீர்கள். இவ்வளவு தடைகளையும் தாண்டி முன்னேற கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை தேவை. ஆரோக்கியம் சீராகும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வெளியிட பயணங்களைக் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் வந்து மறையும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உள ரீதியான பிரச்சனைகள் மறையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமைக்கு குறைவு இருக்காது. உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். போட்டியாளர்களின் எண்ணிக்கை குறையும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியாகவும் விரைவில் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் நன்மைகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முடிவுகளில் சாதக பலன் உண்டு. முக்கிய முடிவுகள் எடுக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகஸ்தர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வேகம் விவேகம் அல்ல என்பது புரிய கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் அலசி ஆராயாமல் முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராகவும் செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்படக்கூடிய லாபத்தை திட்டமிட்த் செயல்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் இறை வழிபாடுகளில் அதிக ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிந்திக்கும் எண்ணங்களில் நேர்மறையான சிந்தனை நிறைந்து இருக்கும். தேவையற்றவர்களுடைய பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் சிக்கல்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளி இடங்களில் கூடுதல் மதிப்பு ஏற்படும்.

- Advertisement -