இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்கு இன்றைய தினம் தாய் வழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். பிறருக்கு உதவிகரமாக இருப்பீர்கள். மதியத்திற்கு பிறகு புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெளியூர் பயணங்களின் பொழுது கவனம் தேவை. பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினர் இன்று பல தடைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு இருக்கும். எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் எடுக்கின்ற முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும். பெண்கள் வழியில் தனவரவு இருக்கும். சிலருக்கு நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக முடியும். குடும்பத்துடன் வெளியே சென்று வருவீர்கள்.

கடகம்:
கடக ராசியினர் இன்றைய தினம் எதிர்காலத்திற்கான திட்டமிடல்களை செய்வீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார வரவுகள் தாராளமாக இருக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் அதை விஸ்தரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினர் இன்றைய தினம் எதிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். எதிர்பாரா செலவுகள் ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணியிடங்களில் வீண் விவாதங்களில் ஈடுபடக் கூடாது. பண வரவுகளில் இழுபறி நிலை இருக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். நண்பர்களால் பொருள் வரவு இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். கோர்ட் விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். தொலைதூரப் பயணங்களால் ஆதாயம் இருக்கும். பெண்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு பெறுவார்கள். சிலருக்கு சுப விரயங்கள் ஏற்படும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் சிறந்த அறிவாற்றல் வெளிப்படும். எதையும் திட்டமிட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். குழந்தைகள் வழியில் சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

தனுசு:
தனுசு ராசிக்கு இன்றைய தினம் பொருளாதார நெருக்கடிகள் தீரும். குடும்பத்திற்கான அத்தியாவசிய செலவுகள் செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேருவதில் இழுபறி நிலை ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு உடற்சோர்வு ஏற்படும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் சிறப்பான நாளாக இருக்கும். பணியிடங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை பெருகும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பிரிந்து சென்ற உணவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உடல் மற்றும் மனம் உற்சாகமாக இருக்கும். சிலர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பொருள் வரவு தாராளமாக இருக்கும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் நெருங்கிய உறவுகளால் சங்கடங்கள் ஏற்படும். பணம் தொடர்பான விவகாரங்களில் பிறர் ஏமாற்றக்கூடும். பொருள் வரவு சராசரியான நிலையிலேயே இருக்கும். அரசாங்க ரீதியாக காரியங்களில் தாமதங்கள் ஏற்படும்.

- Advertisement -